நான் என் வழியைச் சிந்தித்துக் கொண்டு 59-06-10 1. எனது சகோதரர்களே, உங்களுக்கு மிகவும் நன்றி, இங்கே இருப்பது என்பது நிச்சயமாகவே அருமையாக உள்ளது. உங்களுக்கு நன்றி. உங்களுக்கு மிகவும் தயவான நன்றிகள். நான் அதைப் பாராட்டுகிறேன், நீங்கள் வரவேற்கப்படுவதை உணர்ந்து கொள்ளும் போது, அது என்னை நன்றாக உணரச் செய்கிறது. நீங்கள் வரவேற்கப்படுவதாகவும், வீட்டில் இருப்பதைப் போன்றும் உணர்ந்து கொள்ளும் படியான ஒரு இடத்திற்குள் வரும் போது, அங்கே அதைக் காட்டிலும் அதிக இனிமையானது வேறு எதுவும் இருக்காது. ஜனங்களுடைய தயவும், தேவன் மற்றும் மக்களுடைய தயவும் இருக்கிற இடத்திலே நான் நின்று கொண்டு இருந்த போது, அதைக் குறித்து நான் எண்ணிப் பார்த்துக் கொண்டிருந்தேன். சற்று முன்பு, அந்தச் செய்தி புறப்பட்டு செல்வதையும், செய்திக்குக் கவனம் செலுத்தும்படி பரிசுத்த ஆவியானவர் மறுபடியும் பேசுவதையும் நான் கேட்டேன். அப்போது நான் - அதன் பிறகு இந்தச் சகோதரர்கள் எழுந்து நின்று அந்தக் காரியங்களைப் பேசுவதையும் கேட்டேன், அது என்னை நன்றாக உணரும்படி செய்கிறது. 2. அதன் பிறகு நான் இன்று விளம்பரங்களில் சிலவற்றைக் காண நேர்ந்தது. கடந்த இரவில் சகோ.ஜோசப் அவர்கள் உங்களிடம் கூறினபடி, நான் இந்நேரத்தில் ஒரு விதமாக அப்படியே ஓடிக் கொண்டிருக்கிறேன். நான் இதே நேரத்தில் கடல் கடந்து போவதற்காக திட்டமிட்டேன், ஆனால் எனது சபையில் இச்சமயத்தில் எனக்கு நடந்து கொண்டிருக்கிற வரிக்கான சில விசாரணையின் நிமித்தமாக அதை மறுத்து விட்டேன். சபையை நிறுவின காரியத்தில், அரசாங்க எண்களையும் மற்றவைகளையும் நாங்கள் எவ்வாறு கொண்டிருக்க வேண்டியதாய் இருக்கிறது, நாங்கள் அதை அறிந்டு இருக்கவில்லை, ஏனென்றால் அந்தக் கூடாரமானது எல்லா ஸ்தாபனங்களுக்கும் பொதுவான (interdenominational) ஒரு கூடாரமாய் இருக்கிறது. அந்த எல்லா குழப்பமான பேச்சின் வழியாகவும் நீங்கள் போக வேண்டியிருந்தது என்பது எங்களுக்குத் தெரியாதிருந்தது; நீங்கள் வெறுமனே ஒரு சபையாக இருந்தீர்கள் என்றும், உங்களுக்கு டீக்கன்மார்களும், மேய்ப்பர்களும் மற்றவர்களும் இருந்தார்கள் என்றும் நாங்கள் நினைத்திருந்தோம். ஆனால் அரசாங்கமோ மாறி விடுகிறது. அவர்கள் 49-ல் மாறி விட்டனர், அப்படித் தான் என்று நினைத்தேன். நல்லது, நான் அப்போது வெளியே ஊழியக்களத்தில் பிரசங்கித்துக் கொண்டு இருந்தேன். அவர்கள் மாறி விட்ட காரியமும், காங்கிரஸ் என்ன செய்தது என்றும் எனக்குத் தெரியாது. 3. நான் கடந்த இரவு கூறினபடி, நாம் ஸ்புட்னிக் செயற்கைக் கோள்களைக் குறித்தும், சந்திரன்களைக் குறித்தும் பேசிக் கொண்டிருந்தோம், ஆனால் நாம் இங்கே கீழே எதைப் பெற்று இருக்கிறோம் என்பதைக் கூட கவனத்தில் எடுத்துக் கொள்ள முடியவில்லை, அது வேறு எங்கேயோ போகும்படி அதைத் தனியே விட்டு விட்டோம், அல்லது எப்படியும் என்னால் முடியவில்லை. நாம் மிக நன்றாக செய்யாமல் இருந்து கொண்டிருக்கும் காரியங்களைக் கவனித்துப் பார்க்கும் போது, நாம் அதில் ஒரு அலுவலை மிக நன்றாக செய்யாமல் இருந்து கொண்டு இருக்கிறோம், ஆனால் - ஒரு தேசமாக, அல்லது ஜனங்களாக. 4. ஆனால் பிறகு, அந்த விளம்பரத்தில் நான் அதைக் கவனிக்கையில், வேறொரு பெரிய காரியம் வருகிறது. சற்று நேரத்திற்கு முன்பு, நான் ஜோசப் அவர்களிடம், “சகோ.ஜோசப் அவர்களே, நான் கடந்த மாலையில், ஒரு பயங்கரமான தவற்றைச் செய்தேன். இந்த கன்வென்சன் கூட்டத்தின் போது, குறைந்தது ஒரு முறையாவது ஒரு சுகமளிக்கிற ஆராதனையைக் கொண்டிராமல் ஒரு கூட்டத்தை நடத்துவது எனக்குப் பிடிக்கவில்லை,” என்று கூறினேன். நான் - நாங்கள் வெள்ளிக்கிழமை இரவுக்காக அதை வைத்து விட்டோம். அதன் பிறகு அந்த விளம்பரத்தைக் கண்டு, என்னுடைய அன்புள்ள விலையேறப் பெற்ற சகோதரனும் நண்பருமாகிய சகோ.கிராண்ட் அவர்களையும் கண்டு, பரிசுத்த ஆவியானவரைத் தேடுவதற்காக அந்த இரவில் ஒரு ஆராதனையைக் கொண்டிருக்க வேண்டியதாய் இருந்தது. மேலும் என்னே, நான் அதிலிருந்து அதை எடுத்துக் கொள்ள விரும்பவில்லை. சகோ.கிராண்ட் அவர்கள் தான் அந்த யோசனையைக் கொண்டிருந்தார் என்றும், வியாதியஸ்தர்களுக்காக ஜெபிக்கும்படி ஒரு இரவுக்காக அதைக் கொடுத்து விடும்படிக்கு இனிமையோடு மாற்றி விடும்படியாகவும் ஜோசப் அவர்கள் கூறினார். 5. சகோதரன் கிராண்ட் அவர்கள் இங்கே இருக்கிறார்களா என்பது கூட எனக்குத் தெரியவில்லை; நான் அவரை இன்னும் காணவில்லை. ஆனால் அவருடைய தீரமான ஆத்துமாவுக்காகவும், மிகவும் அன்பாக அவர் அந்நேரத்தைக் கொடுத்து இருக்கும் விதத்திற்காகவும் தேவனாகிய கர்த்தர் நம்முடைய சகோதரனை ஆசீர்வதிப்பாராக. நாம் அதை மாற்றி விட்டு, வெள்ளிக் கிழமை போன்று அதேவிதமாக ஒரு வியாழக்கிழமை இரவில் அதை வைத்துக் கொள்ளலாம் என்று நான் அவரிடம் கூறினேன். நாம் தொடர்ந்து செய்வோம், ஏனென்றால் ஆத்துமா இரட்சிக்கப்படுவது தான் செய்யப்பட்டிருக்கிற சுகமளித்தல்கள் எல்லாவற்றைக் காட்டிலும் அதிக முக்கியமானது என்று நினைக்கிறேன். அது உண்மை. ஆத்துமா தான் பிரதான காரியம், ஏனென்றால் உங்களால் உங்கள் வியாதிகளிலிருந்து சுகமடைய முடியும், அது உண்மை, உங்கள் இன்னல்கள் குணமாகும். எனக்கு அது தெரியும். ஆனால் அந்த ஆத்துமா குணமடையும் போது, அது நித்தியமாயுள்ளது. ஆனால் சரீரமானது சுகமடையும் போது, ஒருக்கால் நீங்கள் மீண்டும் வியாதிப்படலாம். ஆனால் அந்த ஆத்துமா தான் முக்கியமான காரியமாகும். 6. நித்திய ஜீவன் என்றால் என்ன என்பதன் மதிப்பீட்டை மதிப்படுவதற்கு நீங்கள் எப்பொழுதாகிலும் முயற்சித்திருக்கிறீர்களா-? அதற்காக உங்களால் என்ன-என்ன கொடுக்க முடியும். நான் 19, 20 வயது கொண்ட ஒரு பையனாக திரும்ப என்னால் முடிந்து, முழு உலகத்தையும் உடையவனாயிருந்து, வியாதியோ அல்லது வயோதிபமோ அடையாமல் 500 ஆண்டுகள் ஜீவித்து, நான் - அல்லது வேறொருவனாக ஜீவித்து - அல்லது இன்னும் 10 ஆண்டுகள் கூடுதலாக ஜீவித்து, எல்லா விதமான தொல்லைகளையும் கொண்டிருந்து, என்னுடைய ஆகாரத்திற்காக பிச்சையெடுத்து, உபத்திரவப்பட்டு, முடிவில் இரத்த சாட்சியாக மரித்து, ஆனால் நித்திய ஜீவனைக் கொண்டு இருப்பேன் என்றால், நான் அதையே தெரிந்து கொள்வேன். 500 ஆண்டுகள் முடியும் போது, அது எல்லாமே முடிந்து விடும். ஆனால் நித்திய ஜீவனோ ஒரு போதும் முடிவடையவே செய்யாது. நான் கிறிஸ்துவின் பிரசன்னத்தில் என்றென்றுமாக ஜீவிப்பேன். தேவன் நமக்குக் கொடுத்து இருக்கிற அந்த பொக்கிஷத்தில் (treasure) என்ன பொதியப்பட்டிருக்கிறது என்பது நமக்குத் தெரியாது. 7. சகோ.ராஸ்முசன் அவர்களே, உங்களை இன்றிரவு மீண்டும் காண்பது நிச்சயமாகவே அருமையாயுள்ளது. நாம் ஒருமிக்க இருந்து, வித்தியாசமான ஊழியக்காரர்களாக இருந்திருப்போமென்றால், நாம் அதிகமான ஐக்கியத்தைக் கொண்டு இருந்திருக்க மாட்டோம். நாம் அதி சீக்கிரமாக ஒரு காலை உணவைக் கொண்டு இருப்போம் என்று நினைக்கிறேன். நாம்.., ஒருக்கால் ஒருவர் மற்றவர்களின் கரங்களைக் குலுக்கி, இந்த அருமையான குழுவினராகிய எல்லா மனிதர்களுடனும் சிறிது நேரம் ஐக்கியம் கொண்டிருப்போம், அவர்கள் தங்களுடைய ஐக்கியத்துக்கு வரும்படியாக ஒவ்வொரு வருடமும் தொடர்ந்து விரும்பிக் கேட்டுக் கொண்டேயிருக்கிறார்கள். அது என்னை மிக நன்றாக உணரச் செய்கிறது. 8. கடந்த இரவில் உங்களுடைய வரவேற்புக்காக உங்கள் எல்லாருக்கும் நன்றி தெரிவிக்கும்படியாக என்னுடைய மனைவியும் கூட விரும்பினாள்; அவள் கடந்த இரவு வரவில்லை. எங்களுக்கு ஜோசப் என்ற ஒரு சிறிய மகன் இருக்கிறான். ஜோசப் வருவான் என்று அவன் இங்கே வருவதற்கு (பல) வருடங்களுக்கு முன்பாகவே நான் உரைத்தது உங்களில் எத்தனை பேருக்கு ஞாபகம் உள்ளது-? ஆறு வருடங்கள், அவன் வருவதைக் கர்த்தர் எனக்குக் காண்பித்தார். அவன் முழுவதும் பையனாக இருக்கிறான். அவளோ ஒரு சிறு பெண்ணாக இருக்கிறாள். 9. யாரோ ஒருவர்... கொஞ்ச காலத்திற்கு முன்பு, நான் இங்கே... ஒரு ஸ்பானிஸ் கூட்டத்தில் பேசிக் கொண்டிருந்தேன், நான், “இது ஒரு சர்வதேச கூடுகை,” என்றேன். நான், “நான் ஐயர்லாந்துக்காரன்; என்னுடைய மனைவியோ ஜெர்மனி தேசத்தாள்; என்னுடைய குழந்தை இந்தியன்; நான் ஸ்பெயின் தேசத்தாரிடம் பேசிக் கொண்டிருக்கிறேன்,” என்றேன். அதற்குப் பிறகு, ஒரு சிறு ஸ்பெயின் தேச பெண், “சகோ.பிரன்ஹாமே, உம்முடைய குழந்தையானது சற்றே வெளிரிய மங்கலான நிறம் உடைய ஒரு இந்தியனாக இருக்கிறது என்று நீர் நினைக்கவில்லையா-?” என்றாள். நான், “செயல்பாடுகளின் மூலம் மட்டுமே அவன் ஒரு இந்தியன்,” என்றேன்: உண்மையிலேயே அவன் முழு பையனாக இருக்கிறான். 10. சற்று காலதாமதமாகி விட்டது, எனவே நாம் மிக அதிக நேரம் எடுத்துக் கொள்ள மாட்டோம். அவரிடம் பேசும்படியாக நாம் நம்முடைய தலைகளைத் தாழ்த்துகையில், இப்பொழுது கர்த்தர் தாமே நம்மை ஆசீர்வதிப்பாராக. மிகுந்த கிருபையுள்ள பிதாவே, எங்கள் இருதயத்தில் உள்ள எங்கள் உணர்வை வெளிப்படுத்துவதற்கு எங்களால் எந்த வார்த்தைகளையும் கண்டு பிடிக்க முடியவில்லை. கொஞ்ச காலத்திற்கு முன்பு, அந்தக் கூட்டத்தில் ஒருவர் மூலமாக அது சொல்லப்பட்டது போல, அவரால் 7 வித்தியாசமான மொழிகளில் பேச முடிந்தது, அவரால் சரளமாகவும் பேச முடிந்தது. ஆனால் அவர் ஒரு இரவில் உம்மோடு நெருங்கிச் சேர்ந்த போது, அவர் எவ்வாறு உணர்ந்தார் என்பதை வெளிப்படுத்துவதற்கான எந்த வார்த்தைகளையும் கண்டு பிடிக்க அவரால் இயலவில்லை, எனவே அவருடைய உணர்ச்சிகளை உம்மிடம் வெளிப்படுத்து வதற்கு ஒரு புதிய பாஷையை அவருக்கு நீர் கொடுத்தீர். அதே விதமாகவே நாங்களும் உணருகிறோம், கர்த்தாவே. நாங்கள் உம்மை எவ்வளவு நேசிக்கிறோம் என்று கூறுவதற்கும், நீர் எங்களுக்கு என்னவாக இருந்து வருகிறீர் என்பதற்காக உமக்கு நன்றி கூறுவதற்கும் எங்களுடைய சிந்தனைகளில் எங்களால் கற்பனை செய்ய முடிந்த எந்த வார்த்தைகளும் இல்லை. எங்களால் போதுமான அளவு பயபக்தியாய் இருக்க முடியாது, நீர் எங்களோடு தொடர்ந்து இருக்கும்படி உம்மிடம் கேட்கும்படியாக உம்மிடம் வருவதற்கு போதுமான ஆழமான சிந்தனைகளை சிந்திப்பதற்குக் கூட எங்களால் முடியவில்லை. ஓ, நாங்கள் உம்மை விரும்புகிறோம், கர்த்தாவே. அந்தப் பாடலை எழுதினவர் கூறினபடி, “நான் உம்மை விரும்புகிறேன். ஓ, நான் உம்மை வாஞ்சிக்கிறேன், ஒவ்வொரு மணி வேளையும் நான் உம்மை வாஞ்சிக்கிறேன்”, அவ்விதமாகத் தான் நாங்களும் உணருகிறோம், கர்த்தாவே. எனவே உமது ஆசீர்வாதங்களைக் குறித்துப் பேசி, அவைகள் வெளிப்படும் ஒரு மகத்தான நாளுக்குப் பிறகு நாங்கள் அமர்ந்திருக்கையில், இப்பொழுது எங்களுக்கு அருகில் வாரும். நாங்கள் இன்றிரவு மீண்டும் வார்த்தையை கேட்கும்படியாக வந்து இருக்கிறோம். உம்முடைய ஊழியக்காரனின் வார்த்தைகளை நீர் எடுத்து, உம்முடைய ஜனங்களின் இருதயங்களில் அவைகளைப் பேச வேண்டும் என்று நாங்கள் ஜெபிக்கிறோம். இன்றிரவு நாங்கள் இங்கிருந்து செல்லும் போது, ஜீவியத்தில் எப்பொழுதும் இருந்ததைக் காட்டிலும் அதிகமாக உம்மைச் சேவிக்கும் படியான தீர்மானத்தோடு இங்கிருந்து நாங்கள் போகும் வரையில், எங்களுடைய இருதயங்கள் உமது அன்பினாலே மிகவுமாக நிறையப்பட்டிருப்பதாக. 11. இங்கே தற்காலிகமாக வந்திருக்கிற ஒருவர் (sojourner) இருந்து, இன்றிரவு அவர் எங்கள் மத்தியில் வந்திருந்து, உமது ஆவியின் ஞானஸ்நானத்தில் உம்மை அறியாமலோ, அல்லது விசுவாச அறிக்கையின் மூலமாக உம்மை அறிந்திராமலோ இருப்பார் என்றால், அவர்கள் தேவனிடம் ஒரு நித்திய “ஆம்” என்று கூறி தங்களுடைய எல்லாவற்றையும் ஒப்புவிக்கும் வேளையாக இது இருப்பாதாக. அது செய்யப்பட்டும், அவர்கள் விசுவாசித்தது முதற்கொண்டு இன்னும் பரிசுத்த ஆவியைப் பெற்றுக் கொள்ளாமல் இருப்பார்கள் என்றால், அவர்களுடைய ஜீவியத்தில் தேவனுடைய வரத்தை அவர்கள் பெற்றுக் கொள்ளும் இரவாக இது இருப்பதாக. கர்த்தாவே, எங்கள் மத்தியில் வியாதியஸ்தர் இருப்பார்கள் என்றால், அவர்கள் புதிதாக கண்டு கொண்ட விசுவாசத்திற்காகவும் ஆரோக்கியத்திற்காகவும் தேவனுக்கு நன்றி கூறிக் கொண்டே களிகூர்ந்தபடியே இன்றிரவு இங்கிருந்து வெளியே போவார்களாக. நாங்கள் உம் பேரில் தான் சார்ந்திருக்கிறோம், கர்த்தாவே, நீர் எங்களை நன்மைகளால் நிறைப்பீர் என்று நீர் வாக்குத்தத்தம் செய்து இருக்கிறீரே. “நீதியின் பேரில் பசி தாகமுடையவர்கள் பாக்கியவான்கள், அவர்கள் நிறையப்படுவார்கள்.” இப்பொழுது, எங்களுக்கு தேவையிருக்கிறபடி எங்கள் இருதயங்களில் பேசும்; நாங்கள் இயேசுவின் நாமத்தில் இதைக் கேட்கிறோம். ஆமென். 12. “நான் என் வழியைச் சிந்தித்துக் கொண்டு,” என்ற ஒரு பாடத்தை இன்றிரவுக்காக தேர்ந்து எடுத்துள்ளேன். நான் சில வேத வாக்கியங்களை அல்லது 119-ம் சங்கீதம் 59-வது வசனத்தில் காணும் ஒரு வேத வசனத்தை வாசிக்க விரும்புகிறேன்: என் வழிகளைச் சிந்தித்துக் கொண்டு, என் கால்களை உம்முடைய சாட்சிகளுக்கு நேராகத் திருப்பினேன். இந்த சங்கீதத்தை தாவீது எழுதும் போது, அவன் தொல்லையில் அகப்பட்டுக் கொண்டிருந்தான். அந்த சமயமானது சவுல் அவனைக் கொல்வதற்கு பயமுறுத்திக் கொண்டிருந்த நேரமாக இருந்தது என நமக்குக் கூறப்பட்டுள்ளது. அவனுடைய வீடு இரகசியமாக கூர்ந்து கண்காணிக்கப்பட்டுக் கொண்டிருந்தது. சவுலுடைய மனுஷர்கள் தாவீது வெளியே வருவதைக் காணும்படியாக கவனித்திருந்து, பின்பு அவனைக் கொன்று விடலாம் என ஏற்பாடு செய்திருந்தனர். தாவீது தன்னுடைய கரங்களை பிசைந்து கொண்டே தரையில் முன்னும் பின்னும், மேலும் கீழும் நடந்து கொண்டிருப்பதை காண்கிறதாக இன்றிரவு என்னால் கற்பனை செய்து பார்க்க முடிகிறது. வழக்கமாக ஒரு மனிதன் தொல்லையில் அகப்படும் போது தான் அவன் தேவனிடம் திரும்புவான். ஒரு மனிதன் தான் ஒரு பாவி என்றோ அல்லது தேவனுடைய சமூகத்திலிருந்தும், ஆசீர்வாதத்திலிருந்தும் அப்பால் இருக்கிறான் என்றோ அவனைக் கண்டு கொள்ளச் செய்வதற்கு எடுத்துக் கொள்ள வேண்டிய அந்தக் காரியங்கள் மிகவும் மோசமானதாக இருக்கிறது. ஆனால் தேவன் அவ்விதமாகத் தான் அதைச் செய்கிறார். அவன் சிந்தித்துக் கொண்டிருக்கிறதாக என்னால் அவனைக் காண முடிகிறது. உடனடியாக தேவனுடைய நன்மையானவைகளால் நிரம்பி வழிய அவன், “என் வழிகளைச் சிந்தித்துக் கொண்டு என் கால்களை உம்முடைய சாட்சிகளுக்கு நேராகத் திருப்பினேன்,” என்று பாடத் தொடங்குகிறான். 13. ஒரு சில மாதங்களுக்கு முன்பு, இந்தியானாவிலுள்ள எங்கள் சிறிய ஜெபர்ஸன்வில் பட்டணத்தில், தன்னுடைய மகனுக்காக அந்த நீதிமன்றத்தின் நீதிபதியிடம் (அவர் என்னுடைய ஒரு தனிப்பட்ட நண்பர்) சென்று பரிந்து பேசும்படிக்கு ஒரு தாயாரால் அழைக்கப்பட்டேன். அவன் ஒரு காரைத் திருடினதற்காக சிறைச்சாலைக்குப் போயிருந்தான். நான் நீதிபதியை அழைத்து, “இந்தக் காலையில் வழக்கு விசாரணைக்கு முன்பாக நான் தனிப்பட்ட முறையில் உங்களிடம் கொஞ்சம் பேசலாமா-?” என்று கேட்டேன். அவர், “நிச்சயமாக,” என்றார். நான் அவருடைய அலுவலகத்திற்குச் சென்று கதவைத் தட்டினேன், அவர்கள் கதவைத் திறந்தனர். அவர் அந்த மனிதனை வெளியே போகும்படி கேட்டுக் கொண்டு விட்டு, அவர் எனக்கு ஒரு அருமையான பெரிய கைகுலுக்குதலைக் கொடுத்து, “சகோதரன் பிரன்ஹாமே, இந்தக் காலையில் உங்கள் மனதில் என்ன உள்ளது-?” என்று கேட்டார். 14. நான், “நீதிபதி அவர்களே, நான் உங்களிடம் ஒரு காரியத்தைக் கேட்க விரும்புகிறேன், நீங்கள் தாமே ஒரு நீதியுள்ள நியாயாதிபதிக்கு முன்பாக ஏதோ ஓரு நாளில் நிற்கப் போகிறீர்கள் என்பதை அறிந்து, உங்களுடைய தீர்மானங்களில் நீங்கள் உங்கள் அறிவுக்கு எட்டினவரை நேர்மையாக இருக்க வேண்டும் என்பதை நான் அறிவேன். ஆனால் நீங்கள் ஒரு சில நிமிடங்களில் வழக்கு விசாரணைக்கு உட்படுத்தப் போகும் அந்தப் பையனின் தாய் சென்ற இரவில் என்னை அழைத்து, தன்னுடைய மகன் அவளுடைய தோளின் மேல் (விழுந்து), தேம்பியழுது “அம்மா, தேவன் மாத்திரம் என்னை வெளியே வர அனுமதித்தால், நான் என்னுடைய ஜீவிய நாளெல்லாம் அவரையே சேவிப்பேன்,” என்று கூறினதாகச் சொன்னாள்,” என்றேன். நீதிபதி என்னை நோக்கிப்பார்த்து, அவர், “பில்லி, என்னவென்று உமக்குத் தெரியுமா-? நான் இது வரையிலும் ஒரு மனிதனையும் ஒருக்காலும் சிறைக்கு அனுப்பினது இல்லை, ஆனால் அவன் இங்கிருந்து செல்வதற்கு முன்பாக ஒரு பிரசங்கியாக இருக்க வேண்டுமென்று தான் விரும்பினேன்,” என்றார். நீங்கள் பாருங்கள், நாம் தொல்லையில் இருக்கும் போது தான், தேவனைக் குறித்து எண்ணத் துவங்குகிறோம். நாம் அதை அவ்விதம் கொண்டிருப்பது மிகவும் மோசமானது தான். ஆனால் அது அவ்விதமாகத் தான் உள்ளது. 15. இஸ்ரவேலர்கள் தேவனை விட்டு விட்டு, விக்கிரகங்களின் பின்னால் சென்று அவர்கள் செய்யக் கூடாத காரியங்களைச் செய்த போது, அவர்கள் தொல்லையில் அகப்பட்டனர், அப்போது அவர்கள் அழுது தேவனிடம் திரும்பினார்கள். அவர்கள் ஆட்டையும் மிருகங்களையும் பலியிட்டு, இரவு பகலாக இரக்கத்துக்காக கண்ணீர் விட்டு அழுதனர். அப்போது இஸ்ரவேலரிடம் இருந்த அந்த வினோதமான காரியம் தான், இன்று சபையிடமும் உள்ளது, தேவன் அவர்களுடைய தீங்கிலிருந்து அவர்களை விடுவித்துக் காப்பாற்ற வருவார், அப்போது அவையெல்லாம் முடிந்த பிறகு, அவர்கள் அதைக்குறித்த எல்லாவற்றையும் மறந்து விடுவார்கள். 16. தேவன் ஒரு மனிதனுடைய பாவங்களை மன்னித்து, அவனுக்கு நித்திய ஜீவனைக் கொடுக்க மிகவும் கிருபையுள்ளவராக இருந்தாரானால், அவன் தேவனுடைய சாட்சிகளை விட்டு தன்னுடைய கால்களை ஒரு போதும் திருப்பாமல் தன்னுடைய ஜீவனுள்ள நாட்களெல்லாம் அவன் தேவனுக்கு முன்பாக மிகவும் பயபக்தியோடு இருந்தாக வேண்டும். அவன் தேவனுக்கு முன்பாக எப்பொழுதும் நேர்மையாய் நடக்க வேண்டும். ஆனால் அது அப்படியே அவ்விமாகத்தான் உள்ளது; அவர்கள் அவ்விதமாகத்தான் அதைச் செய்கிறார்கள். நாம் தொல்லையில் அகப்படாமல் இருக்கும் போதே தேவனைத் தேடுவது தான் நம் எல்லாருடைய கடமையாகும். நாம் தொல்லையில் அகப்படுவது வரை காத்திருந்து பிறகு தேவனைத் தேடுவது நல்லதல்ல; இப்பொழுதே அவரைத் தேடிக் கண்டு பிடிப்பதே சிறந்ததாகும். அவர், ஆபத்துக் காலத்தில் அனுகூலமான துணையாய் இருக்கிறார் என்று எழுதப்பட்டுள்ளது. 17. நான் ஒரு சம்பவத்தை நினைவுகூர முடிகிறது. அங்கே பின்னாலிருக்கும் என் மனைவிக்கு அது என்னை விட அது அதிகமாக நினைவிருக்கும் என்று நான் நினைக்கிறேன். எங்களுடைய தேனிலவின் போது, நான் அதை கொஞ்சம் இரண்டு முறை செய்ய வேண்டியிருந்தது. எங்களுடைய தேனிலவின் போது, எங்களிடம் கொஞ்சம் பணமே தவிர வேறு இல்லை, இந்நிலையில் நான் நயாகரா நீர்வீழ்ச்சியைப் பார்க்கும்படியாக அவளை நியூயார்க்குக்கு அழைத்துச் சென்றேன். நாங்கள் அங்கே மேலே இருந்த போது, நான் வேட்டைக்குச் சென்றேன். ஒரு காலை வேளையில், நான் அவளை ஒரு சிறிய சாய்வான இடத்தில் விட்டேன். நான் காடுகளில் ஒருபோதும் நானே வழிதவறிப் போய் விடாத (அளவுக்கு) நான் மிகவும் நல்லதொரு இந்தியன் என்று நினைத்தேன். ஒரு குறிப்பிட்ட நேரத்தில் நான் திரும்பி விடுவேன் என்று அவளிடம் கூறி விட்டு, பிரிந்து சென்று விட்டேன், அவள் ஒரு பட்டணத்துப் பெண், அவளுடைய ஜீவியத்திலேயே அவள் மலைகளில் ஒருக்காலும் இருந்ததில்லை. நான், “நீ கொஞ்சம் உருளைக் கிழங்குகளை தீயில் இட்டு வாட்டு, நாம் வறுத்த உருளைக் கிழங்குகளை உப்பும் மிளகும் கொண்டு வேக வைத்துச் சுட்டு, அதை சிறு stick of butterயில் வைத்துக் கொண்டு, நாம் ஒரு உண்மையான யூபிலியை கொண்டிருப்போம். நான் இரண்டு மணிக்கு திரும்பி வந்து விடுகிறேன்,” என்று கூறினேன். 18. நான் என்னுடைய கரத்தை பில்லியின் உச்சந்தலையின் மேல் வைத்தேன், அவன் சுமார் ஐந்து வயது பருவமுள்ள சிறு பிள்ளையாக இருந்தான். நான் கிளம்பி காடுகள் வழியாகச் சென்றேன். மகத்தான பெரிய காடு வழியாக கால் போன போக்கில் சென்று கொண்டிருந்தேன். நான் ஒரு கரடியின் காலடிச் சுவட்டைப் பின்தொடர்ந்து கொண்டிருந்தேன். சற்று கழிந்து நான் அந்த மலைத் தொடரின் குறுக்கே ஏதோவொன்றைக் கவனித்தேன். நான் மற்றொரு மலைத் தொடரை கடந்து சென்றேன், பிறகு அடுத்த மலைத்தொடர், நான் (பிறகு) கீழ் இறங்கினேன், அதற்கு ட்ஜையன்ட்ஸ் (giants) என்று பெயர். அது அடிரான்டாக்ஸில் இருக்கிறது. நான் ஒரு மானைச் சுட்டேன், அது ஒரு மகத்தான பெரிய மான், நான், “அது கரடியை விடவும் சிறந்தது. இப்பொழுது, நான் வீட்டிற்குத் திரும்பிப் போவேன்,” என்றேன். நான் கவனிக்கையில், புயல் மேகங்கள் கீழே காற்றில் மிதந்து கொண்டிருந்தன. நான், “இப்பொழுது, நான் சரியாக இந்த வழியாகத் தான் இறங்க வேண்டும்,” என்றேன். இப்பொழுது, காடுகளில் எப்பொழுதாவது இருந்திருக்கும் யாராவது ஒருவர் புயல் மேகங்கள் வரும் போது, அது தான் கீழே உட்கார வேண்டிய சமயம், ஏனெனில் அது மூடு பனியினால் தெளிவில்லாத சீதோஷ்ண நிலையாக இருக்கும் என்றும், நீங்கள் எங்கே போய்க் கொண்டிருகிறீர்கள் என்றே உங்களுக்குத் தெரியாது என்பதையும் அறிவர். ஆனால் நான் இன்னும் மேல் நோக்கி போனபடி, நான் சரியாகத் தான் சென்று கொண்டிருக்கிறேன் என்று எண்ணிக் கொண்டிருந்தேன், நான் அங்கிருந்து வெளியே போகும்படியான ஒரு இடத்தைக் கண்டுபிடிக்கும்படி முயற்சித்து, மிகவும் தூரமாக நடந்து கொண்டிருந்ததைக் கண்டு கொண்டேன், நான் மானைச் சுட்ட இடத்திற்கே திரும்பி வந்தேன். நான் மூன்று முறை தொடர்ச்சியாக அவ்வாறு செய்தேன். இப்பொழுது, இந்தியர்கள் அதை “மரண நடை” என்று அழைக்கிறார்கள். நீங்கள் சுற்றி சுற்றி வட்டமாக நடந்து கொண்டிருக்கிறீர்கள். நீங்கள் ஒரு வழியில் போய்க் கொண்டிருப்பதாக எண்ணுகிறீர்கள், ஆனால் திரும்ப அதே இடத்திற்கு வருகிறீர்கள். 19. புயல் ஏற்கனவே தொடங்கி விட்டது; பனி பெய்து கொண்டிருந்தது. “நான் இப்பொழுது என்ன செய்ய முடியும்-? எனக்கு இந்தக் காட்டில் மனைவியும் பிள்ளையும் இருக்கிறார்களே, அவர்கள், தங்கள் ஜீவியத்தில் காடுகளிலேயே இருந்ததேயில்லை. அவர்கள் இன்றிரவு மரித்து விடுவார்கள்,” என்று எண்ணினேன். வழக்கமாக நான் ஒரு குகையைக் கண்டுபிடித்து, அதனுள் சென்று, புயல் ஓயும் வரையில் ஒன்றிரண்டு நாட்கள் காத்திருந்து விட்டு, வெளியே வந்து என் இருப்பிடத்தைத் தேடிக் கொண்டு, சென்று விடுவேன். ஆனால் அவர்கள் தங்களைத் தாங்களே எவ்வாறு கவனித்துக் கொள்வது என்று அவர்களுக்குத் தெரியாது. நான், “இப்பொழுது, ஒரு நிமிடம் பொறு; நீ அப்படியே உன்னையே பக்கத்தில் கொண்டு வந்து விட்டாய்,” என்றேன். நீங்கள் அதைச் செய்யும் போது, உங்களுக்கு மனக்கலக்கம் உண்டாகி, பிறகு நீங்கள் இழக்கப்பட்டுப் போவீர்கள். அப்போது நீங்கள் உங்கள் வழியை ஒரு போதும் கண்டு பிடிக்காமல்: அநேகமாக உங்களை நீங்களே மரணத்திற்குள் மூழ்கடித்து விடுவீர்கள். நல்லது, நான் ஒரு வட்டத்தில் சுற்றி சுற்றி நடந்து கொண்டிருந்தேன் என்பதை நான் அறிந்து கொண்டேன். ஆனால் அது என்ன வட்டம்-? நான் மானைச் சுடச் சென்ற போது, காற்று என் முகத்தில் வீசியது, பிறகு பாதையின் பின்னால், காற்று மீண்டும் என் முகத்தில் வீசியது. எனவே என்னால் பொதுவான திசைகளைக் கூற முடியவில்லை, ஏனென்றால் அது மரத்தின் உச்சிகளில் சுழற்றி (twisting) அடித்துக் கொண்டிருந்தது. 20. நான், “நல்லது, நான் மீண்டுமாக ஒரு சரியான வழியில் தான் போய்க் கொண்டு இருக்கிறேன். நான் திரும்பி வர மாட்டேன். நான் நேராகத்தான் போவேன். நான் சரியாக இருக்கிறேன் என்பதை அறிவேன். நான் காடுகளைப் பற்றி மிகவும் நன்றாக அறிந்தவன், நான் ஒருபோதும் காடுகளில் வழிதவறிப் போக முடியாது,” என்றேன். நான் தொடர்ந்து போகத் துவங்கினேன், நான் என்னை ஒருவிதமாக உதறித் தள்ளி விட்டு வந்தேன், அது அறிவு சார்ந்த காரியமாக இருந்தது. “என்னால் வழிதவறிப் போக முடியாது, ஏனெனில் நான் மிகவும் நல்ல ஒரு வேட்டைக்காரன்.” நான் நடக்கத் துவங்கினேன், அப்போது, நான் வழி தவறி இருப்பதை உணரத் துவங்கினேன். நாம் சில சமயங்களில், நாம் ஒரு சபையைச் சேர்ந்து விட்டோம், நாம் சரியாகத் தான் இருக்கிறோம் என்று எண்ணுவதும் அந்த விதமாகத்தான் இருக்கிறது, ஆனால் அங்கே உள்ள ஏதோவொன்று நாம் இழக்கப்பட்டிருக்கிறோம் என்பதை நம்மிடம் கூறும். மரணம் உங்களைத் தாக்கும் வரை பொறுத்திருங்கள், அப்போது நீங்கள் என்ன எண்ணுகிறீர்கள் என்பதைப்பாருங்கள். இப்பொழுதே நிச்சயத்தோடு இருப்பது நல்லது. நான் எனது இருதயத்தில் உத்தமமாகப் போகத் துவங்குகையில், என்னிடம் பேசிக் கொண்டிருக்கும் ஒரு சத்தத்தை என்னால் கேட்க முடிந்தது, “கர்த்தர் ஆபத்துக் காலத்தில் அனுகூலமான துணையாய் இருக்கிறார்,” என்று அது கூறிக் கொண்டு இருந்தது. “இப்பொழுது, நான் பக்கத்தில் வந்து விட்டேன்,” என்று எண்ணினேன். அப்போது நான் முழுவதுமாக இழக்கப்பட்டதை உணர்ந்து கொண்டேன். நான் முழங்கால் படியிட்டு – என்னுடைய தொப்பியின் மேல், என் துப்பாக்கியை மரத்தின் பக்கத்தில் வைத்து விட்டு, “தேவனாகிய கர்த்தாவே, நான் வழிதவறி விட்டேன், நீர் எனக்குத் தேவை,” என்றேன். 21. நான் எழும்பின போது, “இப்பொழுது, நான் மீண்டும் நேராகப் போவேன்,” என்று கூறினேன். நான் இரண்டு மூன்று அடிகள் எடுத்து வைக்கையில் ஒரு கரம் என் தோளின் மேல் வைக்கப்பட்டது, அப்போது நான் பார்க்கும்படி திரும்பினேன், அது அப்படியே மேகங்கள் (விலகி) தெளிவாக காணக்கூடிய கடைசி நேரமாக அது இருந்தது, நான் அந்த ஹரிக்கேன் மலை சிகரத்தைப் பார்த்தேன். நான் நேராக கனடாவுக்குப் போய்க் கொண்டிருந்தேன். கர்த்தரோ என்னைப் பின்னால் அந்த சிகரத்திற்குத் திருப்பினார். நான் மிகச் சரியாக அச்சிகரத்தை நோக்கி என் திசையில் நின்று கொண்டேன். நான் அழுது கொண்டே, தேவனுக்கு ஸ்தோத்திரம் என்று சத்தம் இட்டேன். அவர் என்னுடைய கால்களை மீண்டும் சரியாக பாதையை நோக்கித் திருப்பினார் என்பதை அறிந்து கொண்டேன். அது எனக்கு ஒரு மகத்தான நிமிடமாக இருந்தது, ஆனால் நான் இழக்கப்பட்டிருந்த போது, ஒரு நாளில் அவர் என்னுடைய முகத்தை கல்வாரியை நோக்கித் திருப்பின போது, அது பாதி நிமிடமாக இருக்கவில்லை. அந்தக் குறிப்பிட்ட நேரத்தை என்னால் ஒரு போதும் மறந்து போகவே முடியாது. நாம் நம்முடைய சரியான சிந்தையில் இருக்கையில், நாம் வருவோம். 22. கொஞ்ச காலத்திற்கு முன்பு, ஒரு கறுப்பின வாலிபன், பீட அழைப்பு கொடுக்கப்பட்டுக் கொண்டிருந்த போது, கூட்டத்திற்குள் முண்டியடித்துக் கொண்டு வந்தான். அவன் வெளிப்புறத்திலிருந்து வந்திருந்தான். அவன் மேலே வந்து, “நான் இன்றிரவு ஒரு கிறிஸ்தவனாக ஆக விரும்புகிறேன்,” என்றான். “ஏன், நிச்சயமாக, நாங்கள் அதைக் காண எப்பொழுதும் மகிழ்ச்சி அடைகிறோம்.” அவன், “நான் ஒரு கிறிஸ்தவனாக ஆவதற்கு விரும்ப காரணம் என்னவென்றால், நான் ஒரு அலைந்து திரிகிறவனாக இருந்தேன். நான் ஒரு முறை மேலே வடக்கு காடுகளில் சுற்றிலும் வெளியே அலைந்து திரிந்து கொண்டிருந்தேன். என்னிடம் பணம் இல்லாதிருந்தது. ஒரு மரம் வெட்டும் குழுவிடம் நான் கூலிக்கு வேலைக்கு அமர்ந்தேன், அங்கே ஒரு வயதான கறுப்பின் ஸ்திரீ ஒருவள் சமையல் வேலை செய்கிறவளாக இருந்தாள், தொடர்ந்து செல்லும்படியாக போதுமான பணத்தைச் சம்பாதிக்க, நான் அவளுக்கு பாத்திரங்களையும் மற்றவைகளையும் அப்போது கழுவிக் கொடுத்து, அவளுக்கு உதவி செய்யும்படி இருந்தேன். நாங்கள் பின்னால் உள்ள ஒரு சிறு அறையில் தூங்கினோம், அவளிருந்த இடத்தையும் நானிருந்த இடத்தையும் பிரிக்கும்படிக்கு ஒரு பெரிய துண்டு திரைச் சீலை அங்கிருந்தது. ஒரு இரவு என் தலைக்கு மேல் போர்வையை போர்த்துக் கொண்டிருந்தேன், என்னுடைய ஜன்னல் வழியாக சத்தமாக பேசிக் கொண்டிருக்கும் சத்தங்களினால் நான் விழித்துக் கொண்டேன். நான் போர்வையை என் முகத்தை விட்டு விலக்கினேன். ஒரு மனிதன், “ஜிம், நம்மால் முடிந்தளவு மிக வேகமாக திரும்பி அந்த அறைக்குச் சென்று விடுவோம், ஏனெனில் இன்னும் கொஞ்ச நேரத்தில் நாம் முழுவதுமாக நித்தியத்திற்குள் வீசி அடித்துச் செல்லப்படலாம், அந்த சூறாவளி புயல் சரியாக இந்த வழியாகத்தான் வந்து கொண்டிருக்கிறது,” என்று கூறுவதை நான் கேட்டேன்.” 23. “அப்போது என்னால் வியப்படைவதைத் தவிர வேறு எதுவும் செய்ய முடியவில்லை, நான் ஜன்னல் பக்கம் குதித்து, நோக்கினேன், அந்த நீளமான புனல் வடிவ மேகத்தைக் கண்டேன், மேலும் தொடர்ச்சியான இடிமுழக்கத்துடனும் மின்னலுடனும் வேகமாக காற்று அடித்துக் கொண்டிருந்தது. பாருங்கள், மின்னல் அடித்து, மரங்கள் வேரோடு சாய்ந்து கொண்டிருந்த போது, அந்தப் பெரிய நீளமான சர்ப்பத்தின் வாலானது சரியாக எங்கள் அறையை நோக்கி வந்து கொண்டிருந்தது,” என்று கூறினான். “அப்போது அந்தத் தரைச்சீலை இழுக்கப்படும் சத்தத்தைக் கேட்டேன், அந்த வயதான பெண்மணி, “மகனே, என் பக்கமாக வந்துவிடு; நான் இங்கே ஒரு லாந்தர் விளக்கை வைத்திருக்கிறேன்,” என்றாள். “நான் போனேன், அவள், “நீ ஒரு கிறிஸ்தவனா-?” என்று கேட்டாள்.” “நான், “இல்லை, நான் ஒரு கிறிஸ்தவனல்ல,” என்றேன். “நீ எப்பொழுதாவது ஜெபித்ததுண்டா-?” என்று கேட்டாள். “இல்லை, நான் ஒருபோதும் ஜெபித்ததில்லை,” என்றான். “நல்லது, நீ ஜெபித்துக் கொண்டிருப்பது நல்லது, இந்த சூறாவளி காற்றுகள் எல்லாவற்றையும் தரையில் வீழ்த்தி விடும்,” என்றாள். 24. அவன், “சங்கை அவர்களே, அந்த லாந்தர் விளக்கு வைக்கப்பட்டிருந்த அந்தச் சிறு அறை கூடத்தில் அந்த வயதான பெண்மணியின் பக்கத்தில் முழங்கால் படியிட்டேன். ஆனால் நான் ஜெபிக்க மிகவும் பயந்தேன். என்னால் சரியாக சிந்திக்க முடியவில்லை. ஒவ்வொரு தடவையும் நான் ஜெபிக்கத் தொடங்குகையில், ஒரு மரம் வேரோடு பிடுங்கப்பட்டு, படாரென்ற ஓசை அந்த அறையில் கேட்டுக் கொண்டிருந்தது; ஜன்னல்கள் வெளியே விலகி விட்டன. எனக்கு ஜெபிக்க மிகவும் பயமாக இருந்தது. இப்பொழுது, நான் செய்யக்கூடிய ஒரே காரியம் என்னவென்றால், உட்கார்ந்து உலகத்தில் எதற்கும் சிறிதும் கவலைப் படாமல் தான் பழக்கமாயிருந்த யாரோ ஒருவரிடம் தொடர்ச்சியாக பேசிக் கொண்டு இருந்த அந்த அமைதியான வயதான பரிசுத்தவாட்டியை கவனித்துக் கொண்டிருந்தது தான். கர்த்தாவே, எனக்கு ஜெபிக்க மிகவும் பயமாயிருக்கிறது. ஆனால் நான் பிழைக்கும்படி நீர் அனுமதிப்பீரென்றால், நான் இதற்குப் பிறகு ஜெபிப்பேன்,” என்று கூறினான். 25. நீங்கள் பாருங்கள், சில சமயங்களில் துன்பங்கள் தான் நம்மை உணர்வடையச் செய்து, நம்முடைய நம்பிக்கைகளை தேவனிடம் திருப்புகின்றன, நம்மையே அவரிடமாகத் திருப்புகின்றன. யோபு தன்னுடைய வழிகளைச் சிந்தித்தான் என்று நான் நம்புகிறேன், அவைகள் நிச்சயம் உடையவைகளாக இருக்கும்படி செய்ய அவன் விரும்பினான், தன்னுடைய வழிகளில் மட்டுமல்ல, ஆனால் தன்னுடைய பிள்ளைகளின் வழிகளிலும். தேவன் எப்பொழுதும் மனிதனுக்காக உண்டாக்கப்பட்ட தேவனுடைய ஒரே பாதையில் அவன் வந்தான், சர்வாங்க தகன பலியும் இரத்தத்தின் கீழும் தான். உங்களில் அநேகர் அதைக் குறித்து நிச்சயமுடையவர்களாய் இருக்கிறீர்கள்... நீங்கள் யோபுவுடைய கதையை வாசித்திருப்பீர்கள். அவன், “என்னுடைய பிள்ளைகள் வெளியே விருந்துகளைப் பண்ணியிருக்கிறார்கள். ஒருக்கால் அவர்கள் பாவம் செய்திருப்பார்கள்; நான் அவர்களுக்காக பலி செலுத்துவேன்,” என்றான். அவன் கற்பனைகளின் படியே நடந்து சரியாக இருந்த போதே, அவன் நிச்சயம் உடையவனாய் இருக்க விரும்பினான். 26. நம்முடைய இந்த அழகான தேசத்தில், இன்றிரவு தாய்தகப்பன்மார்கள் வெளியே இந்த மது விருந்துகளைக் கொண்டிருந்து சுற்றிலும் ஓடிக் கொண்டிருப்பதற்குப் பதிலாக, தங்களுடைய முழங்கால்களை முடக்கி அதிக நேரம் ஜெபத்தில் செலவிட்டு, ஜெபத்தின் வழியாக தங்களுடைய பிள்ளைகளை தேவனிடம் கொண்டு வருவார்களானால், நாம் வாலிப பருவத்தினரின் குற்றங்களைக் குறைவாகவே கொண்டு இருப்போம் என்று நினைக்கிறேன், அது உங்களுக்குத் தெரியும். 27. யோபு இரத்தத்தின் வழியில் வருகிறான், இரத்தம் சிந்துதல். தேவன் எப்பொழுதும் மனிதனுடன் ஐக்கியமான ஒரே ஆதாரம் அது தான், சிந்தப்பட்ட இரத்தத்தின் அடிப்படையில் தான். தேவன் ஜனங்களுடன் ஐக்கியங்கொள்ளும் வேறு வழியே கிடையாது, சிந்தப்பட்ட இரத்தத்தின் வழியாக மாத்திரமே தேவன் ஐனங்களுடன் ஐக்கியம் கொள்ளுகிறார். பழைய ஏற்பாட்டில், இஸ்ரவேலர் ஆராதனைக்கான ஒரு ஸ்தலத்திற்கு வர வேண்டியதாய் இருந்தது. அது சிந்தப்பட்ட இரத்தத்தின் கீழாகவே. அதன் பிறகு உபத்திரவமானது யோபைத் தாக்கின போது, அவன், “என் மீட்பர் உயிரோடிருக்கிறார் என்றும், அவர் கடைசி நாட்களில் பூமியின் மேல் நிற்பார் என்றும் நான் அறிந்திருக்கிறேன். இந்தச் சரீரமானது தோல் புழுக்களால் அழிக்கப்பட்டு போனாலும், பின்பு, நான் என் மாம்சத்திலிருந்து தேவனைப் பார்ப்பேன்,” என்று கூச்சலிட முடிந்தது. மேலும் அவன், “அவர் என்னைக் கொன்று போட்டாலும், நான் அவர் மேல் நம்பிக்கையாயிருப்பேன்,” என்று கூச்சலிட முடிந்தது. ஏன்-? அவன் உபத்திரவத்தில் இருந்த போது, எந்தப் பாதையில் திரும்புவது என்பதை அவன் அறிந்திருந்தான். 28. நாம் வாழ்ந்து கொண்டிருக்கும் இந்த நரம்புக்கோளாறின் காலத்தில் (neurotic age), நம்மில் சிலர் வேறு பாதைகளில் செல்கிறோம். அநேக ஜனங்கள் மனநோய் மருத்துவர்களிடம் திரும்பிச் சென்று விடுகின்றனர்... கிறிஸ்தவர்கள் மனநோய் மருத்துவர்களிடம் செல்கின்றனர். அந்த மனநோய் மருத்துவரோ (வேறு) ஒரு மனநல மருத்துவரிடம் போக வேண்டியுள்ளது. நம்முடைய வழியை தேவனை நோக்கித் திருப்புவோம்; அவரே நம்முடைய சுகமளிப்பவர். நம்முடைய இருதயங்கள் நம்மைக் குற்றவாளிகளென்று தீர்க்காது இருந்தால், அப்போது நாம் இந்த உறுதியை கொண்டு இருக்கிறோம்: தேவன் ஜெபத்திற்குப் பதிலளிக்கிறார். யோபு, ஒரு உண்மையான இருதயத்துடன், “என் மீட்பர் உயிரோடிருக்கிறார் என்று அறிந்திருக்கிறேன்,” என்று கூற முடிந்தது. அவன் தன்னுடைய வழிகளைச் சிந்தித்துக் கொண்டு, அவரிடம் திரும்பினான். 29. தாவீது ஏத்தியனாகிய உரியாவின் மனைவியான அழகான பத்சேபாளை எடுத்துக் கொண்டு தவறு செய்த பிறகு, அவன் அவளுடைய பிள்ளையின் அப்பாவாக இருக்கப் போகிறவனாக இருந்தான், மேலும் அவளுடைய வீரமுள்ள கணவன் யுத்தத்தில் கொல்லப்படக் காரணமானான்... ஆனால் நாத்தான் தீர்க்கதரிசி உள்ளே வந்து, அவனிடம், அவனுடைய பாவங்களை வெளிப்படுத்தின போது, தாவீது தன்னுடைய வழிகளைச் சிந்தித்து, இரட்டுடுத்தி சாம்பலில் (உட்கார்ந்து), மனம் வருந்தி அவன், தானே திரும்பினான். அது தான் திரும்புவதற்கான வழியாகும். தேவன் அவனுக்கு செவி கொடுத்தார். தங்களுடைய கால்களை தேவனுடைய சாட்சிகளுக்கு திருப்புகிற ஒரு மனிதனுக்கோ ஸ்திரீக்கோ தேவன் எப்பொழுதுமே செவி கொடுப்பார். தாவீது மரணத்திற்குப் பாத்திரவானாயிருந்தான். அவன் தன்னுடைய சொந்த மரணத்திற்கு தீர்ப்பு வழங்கினான். ஆனால் நாத்தானோ, “நிச்சயமாகவே நீ சாவதில்லை,” என்றான். தாவீது தேவனை அறிந்திருப்பது அவனுக்குத் தெரியும், அவன் தவறு செய்திருந்ததை அறிந்திருந்தான். அவன் தன்னுடைய சகோதரனுடைய மனைவியைக் கறைபடுத்தியிருந்தான். 30. நான் இன்றிரவு வியப்படைகிறேன், இதைக் கூற மாட்டேன், ஆனால் ஒருக்கால் தாவீதைப் போன்று குற்றம் செய்து இன்றிரவு இங்கே உட்கார்ந்து கொண்டிருக்கும் மற்றொரு தாவீது இருக்கலாம். நீ இரவில் உன்னுடைய விளக்கை அணைத்த போது, உன்னுடைய சகோதரனுடைய முகத்தைக் கண்டாய், நீ அந்த மனிதனுடைய அழகான மனைவியைக் கெடுத்தாய் அல்லது அவனுடைய வீட்டை உடைத்துப் போட்டு, அவன், உன்னுடைய சுவரின் பக்கத்தில் துடித்துக் கொண்டிருந்தான். அல்லது ஏதோவொரு ஸ்திரீ, இவள் அந்த ஸ்திரீயினுடைய கணவனுடன் ஓடியதன் மூலமாக உடைக்கப்பட்ட அந்த ஸ்திரீயின் வீட்டைக் காண்கிறாய். நீங்கள் இரட்டினாலும் அறிக்கையினாலும் மனந்திரும்ப வேண்டியது அவசியம் ஆகும். இன்றிரவு சபைக்குத் தேவையாயிருப்பது என்னவென்றால், அறிக்கையிடுதலும், தேவனாகிய கர்த்தரின் சாட்சிகளுக்குத் திரும்பி வந்து சரி செய்தலுமாகும். அங்கே இரக்கமும் மன்னிப்பும் உள்ளது. ஜனங்கள் அடிக்கடி தொடர்ந்து அவ்விதமாக நடந்து கொள்வதாகத் தோன்றுகிறது, அப்போது நீங்கள் மரணத்தின் முன் பக்கமாகவே ஒவ்வொரு மணி நேரமும் நடந்து கொண்டிருக்கிறீர்கள் என்பதை அறிந்து கொள்ளுங்கள். நாம் ஏன் சுயநலம், பேராசை, தேவனற்ற தன்மை, உலகத்தின் காரியங்களில் நம்முடைய கண்களை வைத்தல் ஆகியவற்றில் தொடர வேண்டும்-? நாம் தேவனுடைய சாட்சிகளுக்கு மீண்டுமாக திரும்ப வேண்டிய நேரம் இதுவே. “நான் என் வழிகளைச் சிந்தித்துக் கொண்டு, என் கால்களை உம்முடைய சாட்சிக்கு நேராகத் திருப்பினேன்.” 31. தவறு செய்திருந்த தீர்க்கதரிசியாகிய யாக்கோபு (the prophet Jacob), அவன் குருடாய் இருந்த தன்னுடைய தகப்பனிடம் சேஷ்ட புத்திர பாகத்தின் காரணமாக பொய் சொல்லி இருந்தான். ஒரு நாள் (தன்னுடைய) சொந்த தேசத்திற்குத் திரும்பிப் போக வேண்டும் என்று அவனுடைய இருதயம் ஆவலுடன் வாஞ்சிக்கத் துவங்கினது. அவன் எல்லா சமயமும் (அதை) சிந்தித்துக் கொண்டு இருந்திருக்க வேண்டும், அது வெளியில் தெரியாதபடி மறைத்து வைக்கப்பட்டிருந்தது; ஆனால் அவன் வீட்டை நெருங்கத் தொடங்கின போது, ஏசா தன்னைச் சந்திக்க வெளியில் வந்து கொண்டு இருக்கிறதாக அவன் கேள்விப்பட்டான். அப்போது அவன் தன்னுடைய ஏமாற்றும் வழிகளைக் குறித்து எண்ணினான். அவன் ஆற்றின் அக்கரையில் முழு இரவும் ஜெபம் பண்ணினான். அவன் தன்னுடைய சகோதரனை எப்படியாக வஞ்சித்திருந்தான் என்பதை அவன் எண்ணின போது, அது முழு இரவு ஜெபத்திற்கு அவனை அழைத்தது. சபைக்குத் என்ன தேவை என்று தேவன் அறிவார். 32. சபையானது வழக்கமாக முழு இரவு ஜெபக் கூட்டத்திற்கு அழைப்பு விடுத்த நேரத்தை நான் நினைவு கூறுகிறேன். செய்தி போகும் போது, சபையில் ஈரம் இல்லாத கண்ணே இருக்காது. ஒவ்வொருவரும் தேவனுக்கு முன்பாக கதறிக் கொண்டும் அழுது கொண்டும் இருப்பார்கள். இன்றோ ஜனங்கள் இன்னுமாக தங்களைக் கிறிஸ்தவர்கள் என்று கூறிக் கொண்டு, தாங்கள் விரும்பும் எந்த விதமாகவும் அப்படியே ஜீவித்துக் கொண்டு தொடர்ந்து போவதற்கு மிகவும் சுதந்திரம் பெற்றுள்ளது போன்று காணப்படுகிறது. நாம் வீட்டிற்கு அருகாமையில் இருக்கவில்லையா என்று நான் வியப்படைகிறேன். நாம் நம்முடைய வழிகளைச் சிந்தித்து, நம்முடைய கால்களை அவருடைய சாட்சிகளிடமாக திருப்புவது நல்லது. 33. வல்லமை மிக்க தீர்க்கதரிசியாகிய மோசே ஒரு வயதான மந்தை மேய்ப்பவனாய் இருந்தான், ஒரு நாள் அவன் மலையின் பின் பாகத்தில் அந்த ஆடுகளால் (நடப்பதினால்) உண்டாக்கப்பட்டிருந்த ஒரு சிறு பழைய பாதையின் வழியே வியந்தபடி நடக்க வேண்டிதாய் இருந்தது. ஒருக்கால் அது அவனுக்கு மிகவும் பழக்கப்பட்டதாக இருந்திருக்கும். ஆனால் அந்தக் காலை வேளையானது மற்ற காலை வேளைகளைக் காட்டிலும் அப்படியே சிறிது வித்தியாசமாக இருந்தது. அங்கே அவனைச் சுற்றிலும் ஏதோவொன்று இருப்பதாக காணப்பட்டது. உங்களுக்குத் தெரியும், இயேசு ஒரு முறை, “இவர்கள் பேசாமலிருந்தால் கல்லுகளே கூப்பிடும் (லூக்கா 19:40)” என்று கூறினார். தூதர்கள் அவனுக்குப் பிரசங்கிக்காமல் இருந்திருப்பார்களா என்று நான் வியக்கிறேன். திடீரென்று அவன் தன்னுடைய வழிகளைச் சிந்திக்கத் தொடங்கினான், தன்னுடைய ஜனங்கள் அடிமைத்தனத்தில் இருந்த போது, பாதுகாப்பாக இருப்பதை காண முயற்சித்து, அவன் (தன்னுடைய) ஜீவியத்தில் எப்படியாக தோல்வி கண்டிருந்தான் என்பதை சிந்திக்கத் துவங்கினான். தேவனே, இங்கே இருக்கும் ஒவ்வொரு பிரசங்கியின் இருதயத்திலும் அந்த பாரம் ஏற்படும்படி அருளும். உலகமானது பாவத்தினால் மூடப்பட்டு, சபை அங்கத்தினர்கள் பாவத்தில் ஜீவித்துக் கொண்டிருக்கும் போது, நம்மால் எவ்வாறு சீயோனில் (Zion) இளைப்பாற முடிகிறது-? தேவனுக்குப் பரிசுத்தம் தேவைப்படும் போது, அல்லது பரிசுத்தம் இல்லாமல் ஒருவனும் கர்த்தரைத் தரிசிப்பதில்லை என்னும் போது, சபையானது கோட்பாடுகளாலும், ஸ்தாபனங்களாலும், சுக்குநூறாகக் கிழிக்கப்பட்டு, சகோதரத்துவம் பிரிக்கப்பட்டு, ஜனங்கள் சோர்வுற்றவர்களாக ஆகிக் கொண்டிருக்கும் போது, நம்மால் எவ்வாறு பேசாமலிருக்க முடியும்-? 34. மோசே தன்னுடைய வழிகளை சிந்திக்கத் தொடங்கினான், அவன் தன்னுடைய சொந்த படிப்பையும் பயிற்சிகளையும் விட்டு விட்டு, அவனுடைய ஜீவியத்தில் தேவனுடைய ஒரு அழைப்பு இருந்ததை அறிந்து கொண்டான். ஆனால் அவன் தன்னுடைய சொந்த வழியில் அந்த அலுவலை செய்ய முயற்சித்திருந்தான். நம்மில் அநேக பிரசங்கிமார்கள் அந்தத் தொல்லையில் சிக்கிக் கொள்கின்றனர். நம்முடைய ஜீவியத்தில் தேவ அழைப்பு இருக்கிறது, பிறகு சென்று, அற்புதங்களின் நாட்கள் கடந்து சென்று விட்டன என்றும் பரிசுத்த ஆவியின் ஞானஸ்நானம் என்ற அப்படிப்பட்ட ஒரு காரியமே கிடையாது என்றும்: அந்த நாட்கள் கடந்து போய் விட்டன என்றும் நம்மிடம் கூறும் ஒரு கல்வியைப் பெற்றுக் கொள்கிறோம். தேவனே, நீங்கள் உங்கள் வழிகளை சிந்தித்துப் பாருங்கள். அந்த வார்த்தையை எழுதின அந்த அதே தேவன் இன்னும் ஜீவித்து, அதற்காக உங்களைப் பொறுப்பாளி ஆக்குகிறார். 35. அது தவறு... தேவன் முடிவற்றவராயிருக்கிறார். அவர் பேசும் போது, அது பரிபூரணமாக இருக்க வேண்டும். அவரால் மாற முடியாது. நாம் தேவனுடைய வார்த்தையை மாற்ற முடியாது; நாம் நம்முடைய எண்ணங்களை அவருடைய எண்ணங்களுக்கு மாற்ற வேண்டியதாய் உள்ளது. கிறிஸ்துவில் இருந்த சிந்தையே உங்களிலும் இருப்பதாக. அப்போது அவர் சிந்திப்பதைப் போன்றே நீங்களும் சிந்திப்பீர்கள். அவன் அந்தக் காரியங்களைச் சிந்திக்கத் துவங்குகையில், அவன் முழுவதும் நிலைகுலைந்து போவதை என்னால் காண முடிகிறது. எந்த மனிதனும் தன்னுடைய சொந்த கடந்த கால ஜீவியத்தின் முன்னிலையில் வந்தும் அவனால் அதைக் குறித்து நிலைகுலைந்து போகாமல் இருக்கவே முடியாது. இப்பொழுது பரிசுத்த ஆவியானவர் இங்கேயுள்ள ஒவ்வொரு மனிதரையும் உங்களுடைய கடந்த கால ஜீவியத்திடமாய் திரும்பக் கொண்டு வந்து, அதை நோக்கிப் பார்த்து, அவருடைய சாட்சியிடமாகத் திரும்பும்படிக்கு செய்ய வேண்டும் என்று நான் ஜெபிக்கிறேன். 36. அவன் சிந்திக்கத் துவங்குகையில், வளர்ந்து வரும் வெள்ளைத் தாடியைக் கொண்ட அந்த வயதான மனிதனை என்னால் காண முடிகிறது. ஆனால் அவன், “நான் என் வாழ்க்கையை சீர்குலைத்துள்ளேன். எனக்கு 80 வயதாகிறது. நான் அதைக் குறித்து சிந்தித்துப் பார்ப்பேனென்றால், நான் ஒரு வாலிப மனிதனாய் இருந்து, சரியான காரியத்தை செய்து வந்துள்ளேன், ஆனால் இப்பொழுது வெகு நாட்களாகி விட்டன,” என்றான். கண்ணாடி போன்ற தெளிவான பெரிய கண்ணீர் துளிகள் அவனுடைய வெள்ளை மீசையின் மீது வழிந்து கொண்டிருந்தது... ஏறக்குறைய அந்த சமயத்தில், அவன் தன்னுடைய வழியைச் சிந்தித்துக் கொண்டிருந்த போது, அங்கே இடிமுழக்கம் போன்ற ஒரு சத்தம் அந்த மலையின் பக்கமாக கேட்டது. அவன் தன்னுடைய வழிகளைச் சிந்தித்துக் கொண்டிருந்த சமயத்தில், அவன், “தேவன் செய்துள்ள இந்தக் காரியம் என்னவென்று காணும் படியாக நான் ஒரு பக்கமாக விலகி திரும்பிச் சென்று (பார்ப்பேன்),” என்றான். இன்றிரவு தேவன் அந்த எரிகிற முட்செடியை இங்குள்ள ஒவ்வொரு நபரும் கேட்கக் கூடிய தூரத்தில் (அருகில்) கொண்டு வருவார் என்று நான் நம்புகிறேன். நாம் நம்முடைய வழிகளை சிந்திக்க முடியும். அவன் தன்னுடைய கால்களை ஆடுகளின் பாதையிலிருந்து, காட்டு விலங்குகளின் பாதையிலிருந்து, தேவன் அவனை சிவந்த சமுத்திரம் வழியாக வாக்குத்தத்தம் பண்ணப்பட்ட தேசத்திற்கு வழிநடத்தின பாதைக்குத் திருப்பின போது, அது மோசேயை மாற்றினது. அவனுடைய வழிகளில் சிந்தித்துக் கொண்டிருந்தல், அது அவருடைய வழிகளைச் சிந்திக்கும்படி நமக்கு நன்மையானவைகளைச் செய்கிறது. 37. சேவல் மூன்று முறை கூவின பிறகு, பேதுரு கர்த்தராகிய இயேசுவின் முகத்தை உற்று நோக்கினான், அவன் தன்னுடைய வழிகளைச் சிந்திக்கத் தொடங்கினான், அவன் நம்முடைய கர்த்தருக்கு என்ன செய்திருந்தான் என்பதை. தீர்க்கதரிசனமும் கர்த்தருடைய வார்த்தையும் அவனுடைய பார்வையில் வந்தது, தேவன் அதைக் கூறியிருக்கிறார் என்பதை அவன் அறிந்திருந்தான். அவனிடம் கூறியிருந்த அந்த அதே தேவன் என்ன செய்ய வேண்டுமென்று நம்மிடமும் கூறியிருக்கிறார். அவன் இயேசுவை நடத்தியிருந்த வழிகளைக் குறித்து சிந்தித்துக் கொண்டிருந்த போது, அது என்ன செய்தது, அவன் முதல்தரமான ஜனங்களுக்கு முன்பாக எப்படியாக அவரை மறுதலித்திருந்தான், அவன் உலகத்தில் ஒருவனாய் இருக்க முயற்சித்து, அவர்களில் மற்றவர்களைப் போல செயல்பட அவன் எப்படியாக முயற்சித்தான். அவன் தன்னுடைய வழிகளைச் சிந்தித்த போது, அது அவனை மனங்கசந்து அழும்படி இருளான இடத்திற்குள் அவனைத் துரத்தினது. ஜீவனுள்ள தேவனுடைய சபையானது தேவனுடன் தனித்திருப்பதற்கும், கண்ணீர் விட்டு மனங்கசந்து அழுது, “தேவனே, என் மேல் இரக்கமாயிரும்,” என்று கூறுவதற்கும், இப்பொழுது சேவல் கூவிக் கொண்டிருக்கும் நேரம் இதுவென்று நான் நம்புகிறேன். இன்றிரவு இங்குள்ள மனிதர்களுக்கும் பெண்களுக்கும், பையன்களுக்கும் சிறு பெண்களுக்கும் அதே காரியம் தான் தேவையாய் உள்ளது என்பதில் சந்தேகமில்லை, நம் எல்லாருக்குமே அதுவே அவசியமாய் உள்ளது: தேவனுடன் தனித்திருத்தல். நாம் போகையில், நம்முடைய வழிகளை சிந்தித்துக் கொண்டு, நம்முடைய கால்களை அவருடைய சாட்சிகளுக்குத் திருப்புவோம். 38. (சகோ. பிரன்ஹாம் யூதாஸைக் குறித்து கூறத் துவங்குகிறார் - மொழி பெயர்ப்பாளர்.) ஆமாம், கர்த்தராகிய இயேசுவைக் காட்டிக் கொடுப்பதற்காக அவனுடைய பணத்தைப் பெற்றுக் கொள்ளும்படி பிரதான ஆசாரியனுடைய பக்கத்தில் நின்று கொண்டிருந்த யூதாஸ் தான் அது. நான் நிச்சயமாக அவனுடைய இடத்தை எடுத்துக் கொள்வதை வெறுக்கிறேன். ஆனால் யூதாஸ்-கோரியோத்தை விட அதிக குற்றம் புரிந்த மனிதர்கள் இன்றிரவில் சிகாகோவில் இருக்கிறார்கள். அவன் ஒரு லஞ்சத்தைப் பெற்றுக் கொண்டான். அநேக மனிதர்கள் ஒரு சம்பளத்தையோ, ஒரு காடிலாக் காரையோ, பெரிய வீடுகளையோ எடுத்துக் கொண்டு தேவனுடைய கொள்கைகளுக்கு விற்றுப் போடுகிறார்கள். அவர்கள் பரிசுத்த ஆவியின் ஞானஸ்நானத்தைக் குறித்து வெட்கப் படுகிறார்கள். அவர்கள் தேவனுடைய பரிசுத்த ஆவியின் அசைவாடுதலைக் குறித்து வெட்கப்படுகிறார்கள். அவர்கள் மிகவும் முதல் தரமானவர்கள். அது அவர்களை சபையில் சேரச் செய்கிறது. அவர்கள் புதுப்பிறப்பைக் குறித்து பயப்படுகிற காணரத்தினால் அதைச் செய்கிறார்கள். 39. இருபாலரும் கலந்த ஒரு கூட்டத்தில் நான் இதைக் கூறுகிறேன், ஆனால் என்னை உங்கள் சகோதரனாக, நீங்கள் என்னைப் புரிந்து கொள்ளும்படியாக நான் விரும்புகிறேன். ஒரு குழந்தையானது பிறக்கும் போது, அது தரையில் பிறந்தாலும், அது வைக்கோல் மேல் tickp பிறந்தாலும், அல்லது அது அலங்கரிக்கப்பட்ட ஒரு மருத்துவமனை அறையில் பிறந்தாலும், அது பார்ப்பதற்கு ஒரு அலங்கோலமாகத் தான் இருக்கிறது, எப்படியும் நீங்கள் அதை ஏற்றுக் கொள்கிறீர்கள். ஆனால் அது ஜீவனைக் கொண்டு வருகிறது. அதுதான் புதிய பிறப்பு என்பது. அது பார்ப்பதற்கு ஒரு அலங்கோலம் தான், ஆனால் அது ஜீவனைக் கொண்டு வருகிறது. அது நித்திய ஜீவனைக் கொண்டு வருகிறது. ஆமென். அது ஜீவனைக் கொண்டு வருகிறது. ஜீவன், அது எந்த நிலையில் இருந்தாலும் எனக்குக் கவலையில்லை, நாம் என்றென்றுமாக ஜீவிக்கையில், நான் அந்த ஜீவனைக் கொண்டிருக்கவே விரும்புகிறேன். அதைத் தவிர்க்கும் படியாக மனிதர்கள் சபைகளில் சேர்ந்து கொள்கிறார்கள்; அப்போது அவர்கள் யூதாஸைப் போன்று தங்கள் சேஷ்ட புத்திர பாகத்தை விற்றுப் போடுகிறார்கள். 40. அவன் தன்னுடைய கைகளுக்குள் அந்த வெள்ளிக் காசுகளை இரகசியமாக வைத்து இருக்கையில், அந்த வெள்ளிக்காசுகளுடைய சத்தத்தை (trinkling) அவன் கேட்கையில், அவன், “குற்றமில்லாத இரத்தத்தைக் காட்டிக் கொடுத்தேனே,” என்று அழுதான். பாதையின் முடிவில் எனக்கும் கர்த்தருக்கும் இடையில் அதைப் போன்ற எதுவும் நிற்க நான் விரும்பவேயில்லை. அது உங்களுக்கும் விருப்பமிருக்காது என்று நான் நம்புகிறேன். “நான் குற்றமில்லாத இரத்தத்தைக் காட்டிக் கொடுத்து விட்டேன்.” அவன் குறுக்கு வழியை எடுத்துக் கொண்டான். அவன் ஒரு கயிறை எடுத்துக் கொண்டு போய் தன்னைத் தானே தூக்கிலிட்டுக் கொண்டான். நீங்கள் உங்களுடைய கடந்த கால வாழ்க்கையை சிந்திக்கும்போது, அது உங்களை தேவனிடம் துரத்தும் அல்லது உங்களை தேவனை விட்டு அப்பால் துரத்தும். நீங்கள் பாவத்தின் வழியையும், பின் வாங்கிப் போகும் பாதையையும், புகை பிடித்தலையும், தொடர்ந்து அதை உள்ளே இழுக்க முயற்சித்துக் முயற்சிப்பதையும் எடுத்துக் கொள்ளலாம். நீங்கள் மதுக்கடைக்குச் சென்று, விஸ்கியை வாங்கி, அதைக் குடிக்க முயற்சி செய்து, நீங்கள் உங்களைத்தானே கெடுத்துக் கொண்டு, மற்றவர்களையும் கெடுத்து, பொய் பேசி, திருடி, ஏமாற்றி, அல்லது ஆடம்பரமான ஆடையணிந்து, பகட்டாடை ஒப்பனை செய்து, மற்றவர்களைப் போன்று காணப்பட்டு, இன்றைக்குள்ள இந்த ஜனங்களைப் போன்று நடந்து கொள்ளும் படியாக, நீங்கள் பிரதிநிதித்துவப்படுத்துகிறதற்கு முயற்சிக்கிற அந்த சுவிசேஷத்தையே மறுதலிக்கலாம். 41. நீங்கள் வித்தியாசமாக இருக்க வேண்டும் என்றே தேவன் விரும்புகிறார். வித்தியாசமாய் இருப்பதே அவருக்கு அவசியமாய் இருக்கிறது. நீங்கள் முப்பது வெள்ளிக் காசுகளைப் போன்றே அவ்வளவு குற்றமுள்ளவர்களாய் இருக்கிறீர்கள். நீங்கள் குறுக்கு வழியை எடுத்துக் கொள்ளக் கூடும், நிச்சயமாக, ஆனால் அங்கே எந்த குறுக்கு வழியும் கிடையவே கிடையாது. வேதாகமக் காலங்களைத் திருப்பிப் பாருங்கள். அவரிடம் வந்தவர்கள் பேதுருவைப் போல அவர்கள் தங்களுடைய வழிகளைச் சிந்தித்துக் கொண்ட போது, அவன் இரக்கத்தைக் கண்டடைந்தான். குறுக்கு வழியை எடுத்துக் கொண்டவர்களோ, நித்தியமாக அங்கே வெளியே எங்கோ ஓரிடத்தில் தேவனற்றவர்களாய், நம்பிக்கையற்றவர்களாய், கிறிஸ்து அற்றவர்களாய் இருக்கிறார்கள். அவரிடம் போகிற வழியை எடுத்துக் கொள்ளுங்கள்; அது திறந்தே இருக்கிறது. அது உண்மை. அந்த ரோமப் போர்சேவகன் தன்னுடைய ஈட்டியால் அவருடைய (இயேசுவுடைய) விலாவைக் குத்தின பிறகு, தண்ணீரும் இரத்தமும் பீறிட்டு வந்ததைக் கண்டான், நடுப்பகலில் சூரியன் கீழே போவதைக் கண்டான், பெருங்கற்களும் மலைகளும் துண்டு துண்டாகப் பிளந்து போயின, அவன் இடி முழங்கினதைக் கேட்டான், ஒரு மேகமும் இல்லாமலே மின்னல் அடித்ததைக் கண்டான், அப்போது அவன் தன்னுடைய நெஞ்சில் அடித்துக் கொண்டு, “அவர் நிச்சயமாகவே தேவனுடைய குமாரன் தான்,” என்றான். அவன் தன்னுடைய வழிகளைச் சிந்தித்துப் பார்த்தான். அவன் என்ன செய்திருந்தான் என்பதைக் கண்டான். கீழே சிலுவையின் அடியில் அவன் சென்றான், அவ்வண்ணமாகத்தான் நமக்குக் கூறப்பட்டுள்ளது. அவன் தன்னுடைய வழிகளைச் சிந்தித்துப் பார்த்து, தேவனுடைய சாட்சியிடமாக அவன் திரும்பினான். 42. பிலாத்து இயேசுவைக் குறித்து அவனுடைய கைகளைக் கழுவ முயற்சித்த பிறகு, பத்து வருடங்கள் கடந்தன, அவன் அப்பொழுதும் கிறிஸ்துவின் இரத்தத்தை தன்னுடைய கரங்களை விட்டு அகற்ற முயற்சித்துக் கொண்டிருந்தான். ஒருக்கால் இன்றிரவிலிருந்து பத்து வருடங்களுக்குப் (பிறகு), நீங்கள் உங்கள் கரங்களை விட்டு இந்தச் செய்தியை உதறித் தள்ள முயற்சித்துக் கொண்டிருக்கலாம். ஆனால் அவன் கழுவினான், அவன் கழுவினான், அவன் கழுவினான், அதை நீக்க அங்கே எந்த வழியுமே இல்லாதிருந்தது, அவன் கொன்று போட்டிருந்த மனிதரிடம் திரும்புவதற்கு மிக அதிக அளவு அகங்காரம் அவனுக்கிருந்தது. இறுதியாக அவன் சுவிட்சர்லாந்திலுள்ள ஒரு சிறு குளத்திலுள்ள தண்ணீரில் தன்னைத் தான் மூழ்கடித்து மரித்துப் போனான், ஒவ்வொரு பெரிய வெள்ளிக்கிழமையன்றும் அதில் நீல நிறத் தண்ணீர் தோன்றுவதாக மக்களால் நம்பப்படுகிறது (legend). 43. இன்றிரவு, நீங்கள் உங்களுடைய வழிகளைச் சிந்தித்துக் கொண்டிருக்கிறீர்களா என்று நான் வியப்படைகிறேன். நீங்கள் செய்திருக்கிற ஏதோவொன்றை, நீங்கள் நடந்த ஏதோவொரு பாதையை உங்கள் மனதில் நீங்கள் திரும்ப சிந்தித்துப் பார்த்துக் கொண்டிருக்கிறீர்களா என்று நான் வியப்படைகிறேன். நீங்கள் அவ்வாறு சிந்தித்துக் கொண்டிருந்து, நீங்கள் குற்றவாளிகளாக தீர்க்கப்படுவீர்களானால், போய் ஒரு சபையைச் சேர்ந்து கொள்ளவோ, அல்லது போய் இதைச் செய்யவோ அல்லது சாகும்படி எதையாவது குடிப்பதோ, அல்லது ஏதோவொன்றைச் செய்யும் குறுக்கு வழியை எடுத்துக் கொள்ளாதீர்கள். நல்லது, நான் ஒரு காரியத்தை உங்களிடம் கூறட்டும். இம்மானுவேலின் இரத்தக் குழாய்களிலிருந்து எடுக்கப்பட்ட இரத்தத்தினால் நிறைந்த ஒரு ஊற்றுண்டே, அந்த இரத்த வெள்ளத்தில் மூழ்கும் பாவிகள் தங்கள் பாவக் கறைகள் அனைத்தையும் போக்கிக் கொள்கின்றனர். மரித்துக் கொண்டிருந்த அக்கள்ளன் (அவனுடைய வழியைச் சிந்தித்துப் பார்த்து) அந்த ஊற்றை அவன் நாளில் கண்டு களிகூர்ந்தான்; அவனைப் போல் கொடியவனாயிருந்த போதிலும் என் பாவங்கள் அனைத்தையும் கழுவிக் கொள்வேனாக. உமது காயங்களிலிருந்து பெருக்கெடுத்து வரும் இரத்த ஆற்றை நான் விசுவாசத்தில் கண்ட முதற்கு, மீட்கும் அன்பே என் பாடலாயுள்ளது, நான் மரிக்கும் வரைக்கும் அது அவ்வாறே இருக்கும். இந்த எளிய மழலை, திக்கு வாயுள்ள நாவு அமைதியாக கல்லறையில் படுத்துக் கொண்டிருக்கும் போது, இரட்சிக்கத் தகுந்த உம் வல்லமையை உயர்ந்த, இனிய பாடலால் பாடித் துதிக்கும். அவரிடம் ஓடிச் செல்லுங்கள். அங்கே அந்த நீரூற்றண்டையில் உங்களுக்கு இடம் உண்டு. நாம் நம்முடைய தலைகளைத் தாழ்த்துவோம். உங்களுடைய வழியைச் சிந்தித்துப் பாருங்கள். 44. கர்த்தாவே, நாங்கள் என்ன செய்ய முடியும்-? நாங்கள் இப்பொழுது எங்களுடைய வழிகளைச் சிந்தித்துப் பார்த்து, அதைச் சரி செய்கிறோம், அல்லது ஒருக்கால் காலை வேளைக்கு முன்பாக அது மிகவும் காலதாமதம் ஆகி விடலாம். எங்களுடைய இருதயங்கள் கலக்கமடைந்து கொண்டிருக்க, மரணம் எங்களைச் சந்திக்கும், அப்போது அந்தக் கறுப்பின வாலிபனைப் போன்று நாங்களும் இருப்போம், அவன் - எங்களால் ஜெபிக்கவே முடியாது. ஆனால் நாங்கள் ஆரோக்கியமாய் இருந்து, “இரத்தத்தினால் நிறைந்த ஒரு ஊற்று உண்டு” என்று அறிமுகப் பாடல் இசைத்துக் கொண்டிருக்க, இங்கே உட்கார்ந்து கொண்டு இருக்கையில், நாங்கள் தாமே எங்களுடைய வழிகளைச் சிந்தித்து உம்முடைய சாட்சிகளுக்கு நேராக திருப்புவோமாக. அந்த ஜீவ பாதைக்கு எங்கள் கால்களை வழிநடத்தும், பிலாத்துவினுடைய நியாயத்தீர்ப்பின் மண்டபத்திலிருந்து இயேசு கால்மிதித்து கல்வாரியை நோக்கி நடந்த எல்லா வழிகளாகிய அந்த இரத்தம் தோய்ந்த பாதைக்கு எங்கள் கால்களை வழிநடத்தும். நாங்கள் எங்களையே உண்மை அற்றவர்கள் என்று தெரிவித்து விட்டு, அவருடைய சிலுவையை எடுத்துக் கொண்டு, அவருக்கு பின்னே அவரைப் பின் தொடர்வோமாக. நாங்கள் சிந்தித்துக் கொண்டு இருக்கையில், பரிசுத்த ஆவியானவர் தாமே எங்கள் இருதயங்களில் பேசி, எங்கள் சுயநல வழியிலிருந்து நாங்கள் விலகி, கர்த்தருடைய வழிகளுக்குத் திரும்புவோமாக. 45. இப்பொழுது, தலைகள் வணங்கி இருக்க, யாவரும் ஜெபித்துக் கொண்டு இருக்கையில், நீங்கள் உங்கள் வழிகளைச் சிந்தித்துப் பார்த்து, அதைக் குறித்து நீங்கள் மிக நன்றாக உணரவில்லை என்றால், நாம் சரியாக இப்பொழுதே வந்து விடுவோம். நாம் அப்படியே நம்முடைய கால்களை ஊன்றி எழுந்து நின்று, “கர்த்தாவே, நான் என்னுடைய வழிகளைச் சிந்தித்துக் கொண்டிருக்கிறேன்,” என்று கூறுவோம். வாலிப நபரே, தேவன் உன்னை ஆசீர்வதிப்பாராக. “நான் என்னுடைய வழிகளைச் சிந்தித்துப் பார்த்து, சரியாக இப்பொழுதே திரும்பி விடுகிறேன். ஓ, நீண்ட காலங்களுக்கு முன்பே நான் பரிசுத்த ஆவியைப் பெற்று விட்டேன், ஆனால் நான் செய்து விட்ட அநேக காரியங்கள் இருக்கின்றன. நான் என்னுடைய வழிகளைச் சிந்தித்துப் பார்த்துக் கொண்டிருக்கிறேன். நான் தவறு செய்து விட்டேன் என்பது எனக்குத் தெரியும், நான் நின்று கொண்டிருக்கையில், சரியாக இப்பொழுதே உம்முடைய சாட்சிகளுக்கு நேராக என்னுடைய கால்களைத் திருப்புகிறேன். இப்பொழுது இந்த சபை எனக்காக ஜெபிக்கும் ஜெபத்தை நான் வாஞ்சிக்கிறேன். ஓ கர்த்தாவே, நான் உம்முடைய சாட்சிகளுக்கு நேராக, உம்முடைய வார்த்தைக்கு நேராக திரும்புகிறேன். இதோ உம்முடைய சாட்சிகள் உள்ளன: “என்னிடத்தில் வருகிறவனை நான் புறம்பே தள்ளுவதில்லை.” சாட்சிகளில் இதுவும் கூட இருக்கிறது, “உங்கள் பாவத்தை நீங்கள் மறைப்பீர்களானால், நீங்கள் வாழ்வடைய மாட்டீர்கள்; ஆனால் உங்கள் பாவங்களை அறிக்கை செய்வீர்களானால், இரக்கம் பெறுவீர்கள்.” 46. நீங்கள் செய்து விட்டிருக்கிற எல்லாவற்றிலிருந்தும் மன்னிப்பைப் பெற்றுக் கொள்ள விரும்புகிறவர்கள், நீங்கள் இன்றிரவிலிருந்து தேவனுக்காக ஒரு அர்ப்பணிக்கப்பட்ட ஜீவியத்தை செய்வீர்கள் என்று வாக்குப் பண்ணி, இப்பொழுது எழுந்து நின்று கொண்டிருக்கிற இந்த இரண்டு வாலிபர்களோடும் உங்களுடைய கால்களை ஊன்றி எழுந்து நில்லுங்கள். சீமாட்டியே, தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக. சுற்றிலும் எல்லா இடங்களிலும் இருக்கிற உங்கள் எல்லாரையும் தேவன் ஆசீர்வதிப்பாராக; அது நல்லது. 47. நானும் நின்று கொண்டிருக்கிறேன், தேவன் என்னை ஆராய்ந்து என்னைச் சோதித்துப் பார்க்க விரும்புகிறேன். அங்கே ஏதாகிலும் அசுத்தமாக காரியம் என்னிடத்தில் இருக்கும் என்றால், அதை எனக்கு வெளிப்படுத்தும், நான் அதை அறிக்கை செய்து, சரி செய்து விடுகிறேன், நான் என்ன செய்ய வேண்டும் என்று அவர் விரும்புகிற எதையுமே நான் போய் செய்வேன். நான் மரித்துக் கொண்டு இருந்தால், அதுவே என்னுடைய கதறுதலாக இருக்கும். நீங்கள் மரித்துக் கொண்டு இருந்தீர்களானால், அதுவே உங்களுடைய கதறுதலாகவும் இருக்கும். எனவே அந்தப் புயல் வருகிறதற்கு முன்பே இப்பொழுதே நீங்கள் ஏன் திரும்பக் கூடாது-? அப்பொழுது உங்கள் ஆபத்து வேளைகளிலும், யோபுடன் சேர்ந்து, நீங்களும், “என் மீட்பர் உயிரோடிருக்கிறார் என்தை அறிந்திருக்கிறேன்,” என்று கூற முடியும். நீங்கள் எழுந்து நிற்க மாட்டீர்களா-? நாம் ஜெபிக்கும் முன்பாக அங்கே இன்னும் யாராகிலும் ஒருவர் உண்டா-? “ஓ கர்த்தாவே, என்னை நினைவுகூரும்.” சீமாட்டிகளே, தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக. தேவன் உங்கள் எல்லாரையும் ஆசீர்வதிப்பாராக. ஜெபத்திற்காக அப்படியே நின்றவண்ணமாக இருப்போம். ஆமாம், அங்கே மேலே பால்கனியில், அது நல்லது. விசுவாசம் கேள்வியினாலே வரும். “ஓ கர்த்தாவே, நான் என் வழிகளைச் சிந்தித்துக் கொண்டு உம்முடைய சாட்சிகளுக்கு நேராக என்னுடைய கால்களைத் திருப்பினேன்.” ஆபத்து ஒருக்கால் அந்தக் கதவண்டையில் படுத்திருக்கலாம்; அது அவ்வாறு இருக்கலாம். அங்கே சிறிது ஆக்கினைத் தீர்ப்பு இருந்தாலும், இப்பொழுதே ஜெபத்திற்காக உங்களுடைய கால்களை ஊன்றி எழுந்து நில்லுங்கள். 48. அநேகர் நின்று கொண்டு இருக்கையில், இன்னும் எழுந்து நின்று கொண்டு இருக்கிறார்கள், தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக. அது தான் உத்தமம். “நான் என்னுடைய வழிகளைச் சிந்தித்துக் கொண்டு... கர்த்தாவே, நான் என்னவாய் இருக்கிறேன் என்றும் எப்படி இருக்கிறேன் என்பதைக் குறித்தும் நான் நினைக்கையில், நான் உம்மிடமாகத் திரும்புகிறேன்.” ஒவ்வொரு மணிநேரமும் அவரிடம் திரும்ப வேண்டியிராமல் அனுதினமும் ஜீவிக்கிறவர்கள் நம்மில் ஒருவர் இருக்கிறார்கள் என்று நான் நம்பவில்லை. நீர் எனக்கு வேண்டும், ஓ நீர் எனக்கு வேண்டும்; ஒவ்வொரு மணிநேரமும் நீர் எனக்கு வேண்டும், ஓ என் இரட்சகரே, இப்பொழுதே என்னை ஆசீர்வதியும், நான் உம்மிடம் வருகிறேன்.” கர்த்தாவே, நான் வருகிறேன். நான் நின்று கொண்டிருக்கிறேன், என்னால் செய்ய முடிந்தது அவ்வளவு தான். நான் தவறாயிருக்கிறேன் என்று ஏற்றுக் கொள்கிற காரணத்தினால் தான், நான் நின்று கொண்டு இருக்கிறேன், உம்முடைய இரக்கத்துக்காக நான் - நான் வேண்டிக் கொள்கிறேன். 49. நான் தொடர்ந்து பிடித்து வைத்திருப்பதற்குக் காரணம் என்னவென்றால், ஜனங்கள் தொடர்ந்து எழுந்து நின்று கொண்டே இருக்கின்றனர். ஒரு நிமிட நேரம் கூடுதலாகக் கொடுப்பது மரணத்திற்கும் ஜீவனுக்கும் இடையே உள்ள வித்தியாசத்தை அர்த்தப்படுத்துமா-? என்று எனக்கு எப்படித் தெரியும். இப்பொழுதில் இருந்து ஒரு மணி அல்லது இரண்டு மணி நேரங்களில், இரத்த உறைதலால் பாதிக்கப்பட்டிருக்கிற யாரோ ஒரு இளைஞன், மாரடைப்பினால், அவன் வெளியே தேவனைச் சந்திக்கப் போகிறான் என்பதை அறிந்து, அவனுடைய படுக்கையில், “ஆனால் இன்றிரவு அங்கே சபையில் நான் எழுந்து நின்றிருந்தால் எப்படி இருந்திருக்கும். நானோ இப்பொழுது மிகவும் தொல்லையில் இருக்கிறேனே; என்ன செய்ய வேண்டும் என்று எனக்குத் தெரியவில்லையே,” என்று அலறிக் கூச்சலிடலாம். என்னுடைய நண்பனே, இப்பொழுதே எழுந்து நில்; இந்த நீரூற்றிற்கு வா. தேவன் உனக்கு இரங்குவார். 50. இப்பொழுது, நம்முடைய தலைகள் வணங்கியிருக்கையில், எழுந்து நின்று கொண்டிருக்கிற நீங்கள், ஒவ்வொருவரும் உங்கள் சொந்த வழியில் நாம் ஜெபிப்போம். கர்த்தாவே, நாங்கள் பணிவோடும், அமைதியாகவும், அடக்கமாகவும், தாழ்மை யோடும் உம்மிடம் வருகிறோம், எங்களிடத்தில் நன்மையான காரியம் ஒன்றும் இல்லை என்பதை அறிந்திருக்கிறோம். எங்களிடத்தில் எந்த சரியான காரியமுமே கிடையாது. நாங்கள் முழுவதுமாக அசுத்தமானவர்கள் தான். நாங்கள் பாவத்தில் பிறந்து, அக்கிரமத்தில் உருவாகி, பொய் பேசுகிறவர்களாக இந்த உலகத்திற்கு வந்தோம். இயல்பாகவே நாங்கள் பாவிகள் தான், கர்த்தாவே, எங்களுக்கு உமது கிருபையும், உமது இரக்கமும், உமது பரிசுத்தமும் தேவையாய் இருக்கிறது; எங்களுக்குள் எதுவுமே இல்லை. எங்களுடைய சபைகளோ அல்லது எங்களுடைய மதக் கோட்பாடுகளோ ஒருக்காலும் எங்களை மறைத்துக் கொள்ள முடியாது; அது அத்தி இலைகள் மட்டுமே, ஆதியிலே அவைகள் புறக்கணிக்கப்பட்டன, அவ்வண்ணமே முடிவிலும் அது புறக்கணிக்கப்பட்டு விடும். 51. ஆனால் நாங்கள் எங்கள் கால்களை உம்முடைய சாட்சிகளிடத்திற்கு, உம்முடைய வார்த்தையிடத்திற்கு திருப்பிக் கொண்டிருக்கிறோம்; நாங்கள் எங்கள் தப்பிதங்களையும் எங்கள் பாவங்களையும் அறிக்கை செய்து, உம்முடைய மன்னிப்புக்காக வேண்டிக் கொள்ளுகிறோம். கர்த்தாவே, எங்களுடைய கறைகள் எதுவாக இருந்தாலும், அந்தக் கள்ளனும் கண்டு களிகூர்ந்த அங்கே இருக்கும் அந்த நீரூற்று தாமே எங்கள் பாவங்கள் அனைத்தையும் கழுவி சுத்தப்படுத்துவதாக. இதை அருளும், கர்த்தாவே. இன்றிரவு நாங்கள் புதிதாகப் பிறந்த குழந்தைகளைப் போல -- புத்துணர்ச்சியோடும், சுத்தமாகவும் இக்கட்டிடத்தை விட்டுப் போவோமாக. இன்றிரவு நீர் எங்களை இந்த பூமியிலிருந்து அழைப்பீரென்றால், நாங்கள் போக ஆயத்தமாய் இருக்கிறோம் என்று உணருகிறோம், ஏனென்றால் எங்களுடைய கால்கள் உம்முடைய சாட்சிகளுகளை நோக்கி திருப்பப்பட்டிருக்கிறது. கர்த்தாவே, நான் காடுகளில் இருந்த போது, நாங்கள் இழக்கப்பட்டு இருந்தோம், அந்நாளில் அந்தக் கோபுரத்தை நான் கண்ட போது என்னுடைய இருதயம் எவ்வளவு களி கூர்ந்தது. இன்றிரவு கல்வாரியின் கோபுரத்தைக் காணுவதற்காக எங்களுடைய இருதயங்கள் களி கூர்ந்து கொண்டிருக்கின்றன, அங்கே தான் பாதுகாப்பு உண்டு என்பதை நாங்கள் அறிவோம், அங்கே தான் இழக்கப்பட்டு போனவர்கள் உள்ளே வந்து, கண்டு பிடிக்கப்பட்டு, வீட்டிற்கு வழி நடத்தப்படுகிறார்கள். 52. எழுந்து நின்று, தங்கள் தவற்றை அறிக்கை பண்ணிக் கொண்டிருக்கிற இந்த அன்பார்ந்தவர்களையும், இந்த மனிதர்களையும், இந்த ஸ்திரீகளையும், பையன்களையும், சிறு பெண் பிள்ளைகளையும் ஆசீர்வதியும். வார்த்தையில் இவ்வாறு எழுதப்பட்டுள்ளது, “என்னிடத்தில் வருகிறவனை, நான் புறம்பே தள்ளுவதில்லை,” என்று. அவர்கள் அவைகளைக் குறித்து சிந்தித்துக் கொண்டு இருக்கிறார்கள். தாவீதைப் போல, தாவீது உரியாவின் மனைவியை எடுத்துக் கொண்டது போல, இவர்கள் ஒருக்கால் மற்ற காரியங்களில் குற்றமுள்ளவர்களாக இருக்கலாம், ஆனால் நீர் அவனைக் கேட்டருளினீர். நீர் தாவீதின் ஜெபத்தைக் கேட்டீர், மேலும் நீர் - அவன் விதைத்ததை அவனே அறுக்கும்படி நீர் செய்த போதிலும், ஆனால் அவன் இன்னும் உம்முடைய ஊழியக்காரனாக இருந்தான்; அவன் உம்மிடம் திரும்பின காரணத்தினால் நீர் அவனை மன்னித்து விட்டீர். 53. இவர்கள் இன்றிரவு யூதாஸைப் போல, சபையை விட்டு அகன்று போகவில்லை, ஆனால் இவர்கள் சிலுவையிடம் வந்திருக்கிறார்கள். இவர்கள் இதை மது அருந்தி அகற்றி விட முயற்சிக்கப் போவதில்லை; இவர்கள் ஜெபத்தினாலே அதை அகற்றி விடப்போகிறார்கள். இவர்கள் யாக்கோபைப் போல செய்யப் போகிறார்கள்; தேவனுடைய தூதனானவர் இவர்களை ஆசீர்வதித்து, எல்லா பாவத்தையும் அவமானத்தையும் எடுத்துப் போடுவது மட்டுமாக இவர்கள் கதறி அழப் போகிறார்கள். கர்த்தாவே, நீர் இப்பொழுதே அதைச் செய்வீர் என்று விசுவாசிக்கிறேன், நீர் அதை வாக்குத்தத்தம் பண்ணியிருக்கிறீர். கர்த்தராகிய இயேசுவின் நாமத்தினாலே நாங்கள் இதை விசுவாசிக்கிறோம். 54. நாம் நம்முடைய தலைகளை வணங்கி இருக்கையில், உங்கள் காலூன்றி எழுந்து நின்று, இன்றிரவு உங்களுடைய கால்கள் தேவனை நோக்கித் திரும்பி இருப்பதாக உணருகிற நின்று கொண்டிருக்கிற உங்களிடம் இதைக் கேட்கப் போகிறேன், உங்கள் கரங்களை அவரை நோக்கி மேலே உயர்த்துங்கள். நான் இவரை நோக்கி, “கர்த்தாவே, நான் என் கால்களை திருப்பியிருக்கிறேன்,” என்று சைகை காட்டுகிறேன். தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக. நூறு சதவீதம் பேர் உங்கள் கால்களை தேவனுடைய சாட்சிகளிடமாகத் திருப்பினீர்கள். அவர் அதைச் செய்வார். அவர் ஒவ்வொரு பாவத்தையும் அகற்றிப் போட்டு விட்டு, உங்களுக்கு சமாதானத்தையும் திருப்தியையும், உலகத்தால் கொடுக்க முடியாத காரியங்களையும் கொடுப்பார். 55. இப்பொழுது, சபையோர் தங்கள் தலைகளை உயர்த்தி, உங்கள் அருகில் நின்று கொண்டிருக்கிற மனிதர்களையும் பெண்மணிகளையும் நோக்கிப் பார்ப்பீர்களாக. அவர்கள் உட்காரும் போது, நீங்கள், “தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக,” என்று அவர்களுடைய கரங்களைக் குலுக்கி, இயேசு கிறிஸ்துவின் ஐக்கியத்திற்குள் அவர்களை வரவேற்கும்படியாக நான் விரும்புகிறேன். நின்று கொண்டிருந்தவர்கள், அவர்கள் கீழே உட்காருகையில், சுற்றிலுமிருக்கிற கிறிஸ்தவர்கள், “சகோதரனே சகோதரியே, தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக,” என்று கூறுங்கள். அங்கே ஏதாகிலும் தவறு இருந்திருக்கும் என்றால், அதெல்லாமே போய் விட்டதாக இப்பொழுது உணருகிறீர்கள், தேவன் உங்கள் மேல் இரக்கமாயிருப்பாராக. ஆமென். 56. உங்கள் மத்தியில் வியாதிப்பட்டிருக்கிற யாராவது இருக்கிறீர்களா-? உங்கள் கரத்தை உயர்த்துங்கள். இப்பொழுது, உங்கள் கரங்களை வியாதிப்பட்டிருக்கிற ஒருவர் மற்றொருவர் மேல் வையுங்கள். கடந்த இரவு நான் கூறினபடி, நான்... நான் ஜெபித்திருக்கிறேன். நான் என்னுடைய ஜீவியத்தில் இந்த ஒரு காரியத்தை விரும்புகிறேன், நான் ஜெபிக்கும் போது, நான் எதைக் கேட்டுக் கொள்கிறேனோ அதைப் பெற்றுக் கொள்ளப் போகிறேன் என்று விசுவாசிக்க, நான் விரும்புகிறேன். லூயிவில், கென்டக்கியைச் சேர்ந்த அசெம்பிளிஸ் ஆஃப் காட் சபையைச் சேர்ந்த ஒரு அருமையான சிறிய சகோதரன் ரோஜர்ஸ் அவர்கள்... அசெம்பிளிஸ் ஆஃப் காட் சபையைச் சேர்ந்த ஜனங்களாகிய நீங்கள், உங்கள் ஊழியக்காரருடைய... உங்கள் புத்தகத்தில் நீங்கள் அவரைப் பார்க்கிறீர்கள், நீங்கள் எப்பொழுதாவது அதை என்னவாக அழைக்கிறீர்களோ அது. அவர் ஒரு அருமையான சிறிய மனிதர் ஆவார். ஏறக்குறைய மூன்று நாட்களுக்கு முன்பு அவர் என்னுடைய படிக்கும் அறையில் இருந்தார், நாங்கள் ஜெபித்துக் கொண்டிருந்தோம். அவர், “சகோதரன் பிரன்ஹாமே, நாம் லூயிவில்லில் ஒரு எழுப்புதலைக் கொண்டிருப்போம் என்று நீர் நினைக்கிறீரா-?” என்று கேட்டார். 57. “நான் அவ்வாறு நம்புகிறேன்,” என்றேன். அவர் திரும்பி என்னை நோக்கிப் பார்த்தார். நான், “சகோ.ரோஜர்ஸ் அவர்களே, நான் அந்தக் குகையில் அன்றொரு நாள் தேவனைச் சந்தித்தேன். நான் அப்படி நினைக்கிறேன் என்று என்னால் கூற முடியவில்லை, ஏனென்றால் நான் அவ்வாறு நினைக்கவில்லை. ஆனால் ஒரு காரியத்தைக் குறித்து என்னால் நேர்மையாக இருக்க முடியும்; நான் அவ்வண்ணமாக நம்புகிறேன்,” என்றேன். நாம் அதைத் தான் செய்கிறோம் என்று நம்புகிறேன். ஆனால் நான் அதை நினைக்கிறதாகக் கூறும் போது. என்னால் அவ்வாறு எண்ண முடியவில்லை, நான் நடுநிலையில் இருக்கிறேன். நான் அதைக் காணவே விரும்புகிறேன், ஆனால் என்னால் அங்கே, இருக்குமா இருக்காதா என்று எனக்குத் தெரியவில்லை. நாம் நம்முடைய ஜீவியங்களை ஆராய்ந்து பார்த்து, அங்கே அதில் ஏதாகிலும் அசுத்தமான காரியம் இருக்கிறதா என்று பார்க்க நாம் விரும்புகிறோம். நம்முடைய இருதயங்கள் நம்மைக் குற்றவாளிகளாகத் தீர்க்காதிருந்தால், அப்போது கேட்கலாம்; அப்போது நீங்கள் கேட்பதைப் பெற்றுக் கொள்ள முடியும். உங்கள் சுகத்திற்காக நான் வேண்டிக் கொள்ளப் போகிறேன். உங்கள் சுகத்திற்காக நீங்கள் வேண்டிக் கொண்டு, உங்கள் பக்கத்தில் உட்கார்ந்து கொண்டிருக்கிற ஜனங்களுடைய சுகத்திற்காகவும் நீங்கள் வேண்டிக் கொள்ள விரும்புகிறேன். தேவன் ஜனங்களைச் சுகமாக்குவார். 58. இப்பொழுது நாம் ஜெபிப்போம். கர்த்தாவே, எங்கள் மீறுதல்களினிமித்தம் நீர் காயப்பட்டது போலவே, அதே விதமாக உமது சாட்சிகளில் இவ்வாறு எழுதப்பட்டு உள்ளது: “அவருடைய தழும்புகளால் குணமாகிறோம்.” சரீரத்தில் வியாதி உள்ளவர்கள் அங்கே இருக்கிறார்கள், அவர்களால் சரியாக உம்மைச் சேவிக்க முடியாது, ஏனென்றால் அவர்கள் வியாதிப்பட்டு மோசமாக உணருகிறார்கள். அவர்கள் களைப்படைந்து, சபைக்கு வருகிறார்கள், அவர்கள் இந்த கன்வென்சன் கூட்டத்தில் உட்கார்ந்து உமது ஊழியனாகிய இந்த ஊழியக்காரன் பேசுவதைக் கேட்டுக் கொண்டு இருக்கிறார்கள். அவர்கள் துயரத்தோடும் வேதனையோடும் இருக்கிறார்கள். தேவனே, அது சரியாக இப்பொழுதே தீர்ந்து (சரியாகி) விடும் படியாக அருளும், அவர்களுடைய இருதயங்களை உமது சாட்சிகளுக்கு நேராகத் திருப்புவார்கள்: “உங்களுடைய சகல வியாதிகளையும் சுகமாக்குகிற கர்த்தர் நானே. விசுவாசிக்கிறவர்களுக்கு எல்லாம் கூடும்.” எங்களுடைய இருதயங்களில் எந்த ஆக்கினைத் தீர்ப்பும் இல்லாதவர்களாய், இப்பொழுது நாங்கள் உம்மை விசுவாசிக்கிறோம், நீர் எங்களைச் சுகமாக்கி எங்கள் எல்லா வியாதிகளையும் எங்களை விட்டு நீக்கிப் போடும். இயேசுவின் நாமத்தில் நாங்கள் இதைக் கேட்கிறோம், அது அவ்விதமே செய்யப்படுவதாக. ஆமென். 59. கர்த்தாவே, இதோ கடிதங்கள் உள்ளன, வியாதியஸ்தரையும் உபத்திரவப் படுகிறவர்களையும் பிரதிநிதித்துவப்படுத்துகிற சிறு அட்டைகளும், பொட்டலங் களும் உள்ளன. பரிசுத்த பவுலுடைய சரீரத்திலிருந்து உறுமால்களை அல்லது கச்சைகளை அவர்கள் எடுத்தனர் என்று நாங்கள் கற்பிக்கப்பட்டுள்ளோம். நாங்கள் பரிசுத்த பவுல் அல்லவென்று நாங்கள் அறிவோம், ஆனால் நீர் இன்னும் தேவனாய் இருக்கிறீர். கர்த்தாவே, அது அவ்வண்ணமாகவே ஆவதாக, இந்தக் கைக்குட்டைகள் வியாதிப்பட்டவர்களைத் தொடும் போது, சத்துரு அவர்களை விட்டு விடட்டும், அவர்கள் சுகமடைவார்களாக. நாங்கள் தேவனுடைய சாட்சிகளை, அவருடைய வேதாகமத்தின் சாட்சிகளைப் பின்பற்றிக் கொண்டிருக்கிறோம், எங்களை சகல அநீதியில் இருந்தும் சுத்திகரித்து, பரிசுத்த ஆவியையும் தெய்வீக சுகத்தையும் சரியாக இப்பொழுதே எங்களுக்குக் கொடுக்கிற தேவ குமாரனாகிய இயேசு கிறிஸ்துவின் இடத்தில் நாங்கள் விசுவாசம் கொண்டிருக்கிறோம். இயேசு கிறிஸ்துவின் நாமத்தில். ஆமென்.